தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கான ராசி பலன் - ஆகஸ்ட் 15 ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காணலாம்.

astrology prediction on 15th August 2022  astrology prediction  August 15 astrology prediction  horoscope  august 15 horoscope  daily horoscope  தினசரி ராசி பலன்  ராசி பலன்  இன்றைய ராசி பலன்  ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கான ராசி பலன்  ஆகஸ்ட் 15 ராசி பலன்  ராசி பலன் கனிப்பு
ராசி பலன்

By

Published : Aug 15, 2022, 6:41 AM IST

மேஷம்:நீங்கள் இறுதியாக யோகிகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறீர்கள். வாழும் கலை கல்வியில் பட்டப்படிப்பு படிக்கலாமா? இசை, நடனம் அல்லது நீண்ட காலமாக நீங்கள் ஆர்வம் கொண்ட ஏதாவது விஷயத்தை கற்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை நிறைவேற்றலாம். இந்த நாள், ஒரு நல்ல, சிறப்பான நாள், மற்றும் இனிமையான வெற்றியை கொடுக்கும் என்று தெரிகிறது.

ரிஷபம்:உங்களுக்கு நெருக்கமானவர் அனைவரும் நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவை கொடுக்கவில்லை என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் நிதர்சனத்தை புரிந்து கொள்ளவும், உணர்ச்சிவசப்படாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்தில் சண்டை வெடிக்கலாம். நீங்கள் மோதல்களை தவிர்ப்பதும், பிரச்சனையை சரியாக கையாள உதட்டில் புன்னகையை அணிந்து கொள்வது அவசியம் என்று அறிவுறுத்துகிறோம்.

மிதுனம்:ஒரு ஆச்சரியமான பயனுள்ள நாள் உங்களுக்காக காத்திருக்கிறது. வேலை உயர்வும், அதற்கு ஏற்றவாறு பொறுப்புகளும் அதிகரிக்கும். இருந்தாலும்கூட, பதவி மற்றும் பாராட்டுக்களை உங்கள் தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம்.

கடகம்: உங்கள் முன்னேற்றத்திற்கான தனிப்பாதையை உருவாக்குவீர்கள். மக்களிடம் இருந்து மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். வியாபார போட்டியாளர்களாலும், நோய்களாலும் பாதிப்பு ஏற்படும். எதிரிகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள், உங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அவர்களின் திட்டங்கள் முறியடிக்கப்படும்.

சிம்மம்: சுற்றி இருப்பவர்களை வைத்து ஒருவரை எடை போடலாம் என்று ஒரு கருத்து நிலவுவது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் உங்கள் இயல்பான உணர்வுகளின் அடிப்படையில், பலரை நண்பர்களாக்கியிருப்பீர்கள். எந்தவொரு சூழ்நிலையிலும், கண்மூடித்தனமாக நம்பும் அளவுக்கு நெருக்கமான நண்பர்களின் சிறப்பான நெட்வொர்க் ஒன்றை நீங்கள் அமைத்திருக்கலாம்.

கன்னி:உங்களுக்கு நெருக்கமானவர்கள் இன்ப அதிர்ச்சியை தருவதுடன், அவர்களும் அதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு உகந்த நாளாக இந்நாள் அமையும்.உங்களின் கடந்தகால தவறுகளை ஒப்புக்கொண்டு,மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருத்தல் நன்மை பயக்கும்.

துலாம்: உங்களின் கடந்த கால அனுபவத்தைக் கொண்டு புத்திசாலித்தனமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.உங்களுக்கு சொந்தமான விலை உயர்ந்த பொருள்கள் மீது உரிமை கொண்டாடலாம். சிறு சிக்கல்கள் உங்களை கவலைக்கு உள்ளாகலாம்.

விருச்சிகம்: ஆரோக்கியத்திற்கான குறிப்புகள் கொடுக்கும் மனநிலையில் இன்று இருக்கிறோம். ஆரோக்கியமான உணவு பழக்கங்களைப் பின்பற்றி, உடல்பருமன் ஏற்படுவதைத் தவிர்க்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும். ஒழுங்கற்ற உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள், சந்தோஷமாக இருங்கள்.

தனுசு: இன்று வேலையிடத்தில் பணிச்சுமை கூடும். இருப்பினும், இதை நீங்கள் ஆக்கப்பூர்வமான சவாலாக எடுத்துக் கொண்டு நேர்மறையாக பணியாற்றுவீர்கள். சொந்த வாழ்க்கையில் உங்கள் நண்பர்கள் பட்டியல் இனி நீளும் வாய்ப்பு தென்படுகிறது. ஒட்டுமொத்தமாக இன்று நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள்.

மகரம்: இன்று, கையில் ஒரு கப் காபியுடன் ஓய்வாக இருக்க விரும்புவீர்கள். அப்போது, உங்கள் பழைய நினைவுகளை புரட்டிப் பார்த்து பொன்னான தருணங்களை அசைபோட்டு மகிழ்வீர்கள். ஒரு காலத்தில் உங்களுடைய மனதிற்கு நெருக்கமாக இருந்தவருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்குமா என்று முயற்சிக்க விரும்புவீர்கள்.

கும்பம்: வாழ்க்கையின் முக்கிய முடிவுகளில் உணர்வுபூர்வமாக முடிவெடுக்க வேண்டாம். பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய விஷயங்களில் உணர்வுபூர்வமாக முடிவெடுப்பது உங்கள் பாதையில் ஒரு தடைக்கல்லாக மாறும். இதை உணர்ந்து முடிவெடுக்கும்போது உணர்ச்சிவசப்படும் பழக்கத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்; இல்லையெனில், அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

மீனம்:இன்றைய நாள் முழுவதும் காதல் துணையோடு பிஸியாக இருப்பீர்கள். காதல் துணை இல்லாதவர்கள், தனக்கு பொருத்தமான துணையை கண்டுபிடிப்பதிலும், திருமணமானவர்கள் தங்கள் உறவில் ஒரு புதிய நெருக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்படுவார்கள். பணி தொடர்பான உங்கள் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையில் மிகவும் கவனமாக மாறிவிடுவீர்கள். இந்த மாற்றங்களின் பலன்களை சற்று காலத்திலேயே நீங்கள் அனுபவிக்க முடியும்.

இதையும் படிங்க: WEEKLY HOROSCOPE: ஆகஸ்ட் மூன்றாம் வாரத்திற்கான ராசிபலன்...

ABOUT THE AUTHOR

...view details