மேஷம் : இன்று, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம் மற்றும் முறையான உடற்பயிற்சி ஆகியவற்றை கடைபிடிப்பது நன்மை பயக்கும். புதிய உணவு ஏதேனும் சுவைத்துப் பார்க்க உங்களுக்கு விருப்பம் இருக்கும். நீங்கள் நெடுநாட்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் நேரம் செலவழிப்பது பலன் தரும்.
ரிஷபம் : நீங்கள், இன்று உங்களது நெருங்கிய நண்பர்கள், குறிப்பாக உங்கள் எதிர் பாலினத்தை சேர்ந்த நண்பர்கள் பற்றி அதிகம் சிந்திப்பீர்கள். திடீரென்று நீங்கள் காதல் வயப்பட்டு உள்ளதை உணர்வீர்கள். காதல் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், அச்சம் ஏதுமின்றி அதைப் பயன்படுத்திக் கொள்ளவும். விரைவில் உங்களுக்கு திருமண உறவு கைகூடும்.
மிதுனம் : இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, வீட்டில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகள் அதிகரிக்கும். அதை சமாளிக்க முடியாமல் நீங்கள் திணறும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் மனநிலை பாதிக்கப்படலாம். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிக்க வேண்டும்.
கடகம் : நிதி நிலைமையை, புத்திசாலித்தனத்துடன் சமாளிக்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் இரண்டிலும், முன்னேற்றமும் வெற்றியும் ஏற்படும். பணிகள் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். எனினும் உங்களுக்கு ஆர்வமான விஷயங்களில் நீங்கள் நேரத்தை செலவழிப்பீர்கள்.
சிம்மம் : விற்பனைத்துறை மற்றும் மார்க்கெட்டிங் துறை தொடர்பான பணியில் இருப்பவர்கள், மேற்கொள்ளும் சந்திப்புகள் பலன் தரும். எனினும், பயணத்தில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்களிடமுள்ள திறமைகளை அறிந்துகொள்ள இது சரியான நேரமாகும். அடுத்த 2-3 நாட்களில், உங்களது திறமையை நிரூபிப்பீர்கள்.
கன்னி : தினசரி பணிகளிலிருந்து செல்வது விலகி, உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள். சோர்வைத் தரும் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் பணிகளை மேற்கொள்ளவும். தனிப்பட்ட அல்லது சமூக அளவிலான சந்திப்புகளில் நீங்கள் கலந்து கொள்ளக் கூடும். மற்றவர்களுடன் கலந்து பழகுவது, உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.