மேஷம்: இன்று, நீங்கள் விரும்பத்தகாத சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதனை தவிர்க்க எவ்வளவு முயற்சி செய்தாலும், விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. சிறிது கால நேரம் எடுத்துக்கொண்டு, அமைதியாக இருக்கவும். ஏனென்றால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, சாதகமான பலன் கிடைக்காத வாய்ப்பே உள்ளது.
ரிஷபம்:இன்றைய தினத்தில், நீங்கள் அதிகம் யோசிக்காமல், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும். உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உங்களது நினைப்பின் காரணமாக, தேவையற்ற பிரச்னைகள் ஏற்படலாம். உங்கள் செயலை ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே, உங்களது பிரச்னைக்கான தீர்வுகள் கிடைக்கும்.
மிதுனம்: இன்று, நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், இதனால் நீங்கள் பாதிப்படையாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் இதனால் பாதிப்படைவார்கள். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளவும். ஏனென்றால் உங்களது கோபம் காரணமாக, தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்பட்டு, நீங்கள் மற்றவர் மனதை புண்படுத்தக் கூடும். நான் முழுவதும் நீங்கள் சிந்தித்து செயல்பட்டால், உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
கடகம்: இன்றைய தினம், அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்கும். கடவுள் அருள் காரணமாக, உங்களது கருத்துக்கள் வரவேற்பை பெற்று, உங்களுக்கு ஆதரவாளர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று உங்களது கற்பனை வளம் மிகுந்து, அதற்கான பலன்கள் உங்களை தேடி வரும்.
சிம்மம்: இன்றைய தினத்தில், உங்கள் வாய்ப்பு எதையும் நீங்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் குறிக்கோளை நோக்கி உறுதியாக செயல்பட்டு, உங்கள் சக பணியாளர்கள் கடமையை தவற அனுமதிக்க மாட்டீர்கள். உங்களது வாழ்க்கையில் சந்தோஷத்தை பெற, நீங்கள் சிறிது வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும். மூத்தவர்களின் ஆசியினால், இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு உதவி கிடைக்கும்.
கன்னி: உங்களது தன்னம்பிக்கை காரணமாக, நீங்கள் மிக எளிதாக சவாலான பணிகளை நிறைவேற்றுவீர்கள். நிதி விஷயங்களைப் பொறுத்தவரை, இன்று உங்களது வர்த்தகத் திறனை சோதிக்கும் நாளாக இருக்கும். தீர்க்கப்படாத பிரச்னைகளை தீர்க்க நீங்கள் புதுமையாக சிந்தித்து வெற்றிகரமாக தீர்த்து வைக்கும் வாய்ப்பு உள்ளது.
துலாம்: இன்று நீங்கள், உங்களை சுற்றி உள்ளவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுவீர்கள். உங்களது கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான, பொன்னான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சுய நிதி மூலம், நீங்களே உங்களது முதலாளியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு, இன்று மிகவும் அனுகூலமான நாளாக இருக்கும்.
விருச்சிகம்: பலன்களைப் பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து கடுமையாக உழைக்கவும். வேலையில் எப்போதும் சிறந்து விளங்க முயற்சி செய்யவும். நீங்கள் கூட்டு தொழில் முயற்சியில் இருந்தால், உங்கள் முயற்சிக்கான பலன்கள் கிடைக்க, சிறிது பொறுமையாக காத்திருக்க வேண்டிய தேவை உள்ளது.
தனுசு:இன்று, நீங்கள் கேட்காமலேயே, சிலர் தாமாகவே முன்வந்து, அறிவுரைகள் கூறி வழிகாட்டலாம். இந்த வாய்ப்பினை தவற விடாதீர்கள். சில ஆலோசனைகள், உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அது குறித்து உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டு, நன்றாக சிந்தித்து, அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து தெளிவான முடிவு எடுக்கவும். இறுதி முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும்.
மகரம்: இன்றைய தினம், உங்களுக்கு சிறந்த நாளாகவே இருக்கும். உங்களுடைய செயல் திறமையினால், நீங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். செயல்திறனை அதிகரிக்க நீங்கள், உங்களது வேலை செய்யும் பாணியை மாற்றிக் கொள்வீர்கள். இதனால் தன்னம்பிக்கை அதிகரித்து, இன்று உங்களுக்கு ஒரு சிறந்த பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும்.
கும்பம்: உங்களது கருணையான மனப்பான்மை மற்றும் உதவி செய்யும் குணம் ஆகியவற்றின் காரணமாக, மற்றவர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். உங்களது சிறந்த பேச்சாற்றலின் காரணமாக நீங்கள் அனைவர் மனதையும் கவர்வீர்கள். உங்களை சுற்றி உங்களுக்கு மனதுக்கு பிடித்தவர்கள் நிரம்பியிருப்பதால், உங்களுக்கு சந்தோஷமான நாளாக இருக்கும்.
மீனம்: இன்றைய தினத்தில், உங்கள் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். உங்களது எதிர்பாலினத்தவர் உங்களை கண்டு மயங்குவார்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நீங்கள் நினைப்பதை விட அதிகம் சாதிப்பீர்கள். நீங்கள் கவனமாக செயல்பட்டாலும், உங்களது கோபப்படும் தன்மையின் காரணமாக, ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படலாம்.