மேஷம்: கவலைகள் சூழ வாய்ப்புள்ளது. உங்களிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்தல் நன்மை பயக்கும்.
ரிஷபம்: அனைத்து விஷயங்களிலும் மரபுகளை கடந்து புதுமையாக செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். பிற்பகலில் உயர் அதிகாரிகளிடம் பணிந்து செல்ல நேரிடலாம். ஆகையால், எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும். மாலை நேரத்தில் உங்கள் பலவீனங்கள் அனைத்தும் உங்கள் பலமாக மாறக்கூடும்.
மிதுனம்:எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதற்கு முன்பு ஆழ்ந்து சிந்தித்து, அதில் உள்ள நன்மை, தீமைகளை மனதில் கொண்டு கவனித்து செயல்படுதல் நன்மை பயக்கும். அத்துடன் எச்சரிக்கையுடன் அனைத்து விஷயங்களிலும் கையாளுதல் அவசியம். சாதாரண விஷயங்களுக்கு கூட கவலை கொள்வீர்கள். நாளின் பிற்பகுதியில் உள்ள நலன்களைப் பற்றி அதிகமாக கவலைப்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் மற்றவர்களை பற்றி கவலைப்படுவதை தவிர்க்கவும். உங்களின் நலன் மீது அக்கறை கொள்ளவும்.
கடகம்: மங்களகரமான நாளாக அமையப் பெறலாம். உங்களின் பணிகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். மாலைப் பொழுதை மனதிற்கு நெருக்கமானவர்களுடன் செலவிடுவதன் மூலம், மனதில் உள்ள பாரம் குறைய வாய்ப்புள்ளது.
சிம்மம்:கவனமாகவும், பாதுகாப்பான சூழலில் இருக்க விரும்புவீர்கள். உங்களின் ஆசைகள் நிறைவேற ஏற்ற நாளாக அமையப் பெறலாம். உங்கள் வேலையில் உறுதியாகவும், குறிக்கோளுடனும் இருப்பீர்கள். எனினும், குடும்பம் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்க எண்ணுவீர்கள். மேலும், சிறு பயணத்தை மேற்கொள்ளலாம்.
கன்னி:உங்களின் கவனம் அதிகரிக்கலாம். வேலைகளை மகிழ்ச்சியாகவும், திறமையாகவும், விரைவாகவும் செய்து முடிக்க முயலலாம். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல நல்வழியாக அமையப் பெறலாம்.