மேஷம்
- இந்த ஆண்டு மேஷ ராசியினருக்கு ஆற்றலில் எந்தப் பற்றாக்குறையும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் முக்கியமான விரும்ப தகுந்த விஷயங்களுக்கு மட்டும் உங்கள் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்.
- பல நேரங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் இடங்களில் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படமாட்டாது. சில நேரங்களில் குடும்ப உறவினர்களின், அறிவுரைகளும், அனுபவங்களும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
- வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டுமென்ற திட்டம் இருந்தால் இந்த ஆண்டில் அதை முயலலாம். உங்கள் திட்டத்திற்கான பலன் இந்த ஐந்து மாதத்தில் கிடைக்கும். இந்த ஆண்டு மூன்று, ஐந்து மற்றும் ஏழாம் மாதம் பயணத்திற்கு ஏற்ற மாதமாக அமைகிறது, ஏனெனில் இந்த மாதத்தில் பயணம் மேற்கொள்வதின் மூலம் நிதிநிலை மேம்படும் மற்றும் மனநிலையிலும் முன்னேற்றம் ஏற்படும்.
- உங்கள் குடும்ப உறுப்பினர்களின் மீது அன்பு அதிகரிக்கும். அவர்களின் மீதான அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவீர்கள். இந்த ஆண்டு நல்ல பணப்புழக்கம் இருப்பதால் தீய பழக்கங்களைக் கைவிடுவது நல்லது. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் குடும்பப் பொறுப்புகளை உணர கொஞ்சம் நேரம் கொடுங்கள்.
- இந்த ஆண்டு அதிகப்படியான வேலையால் மன அழுத்தத்தில் இருந்து வெளிவரக் கோவில்களுக்குச் சென்று அதிக நேரம் கோவில்களில் செலவிடுவதை விரும்புவீர்கள்.
- இந்த ஆண்டு உங்கள் தொழிலுக்குச் சிறப்பான வருடமாகும். குறிப்பாக ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆண்டு உங்கள் குழந்தைகளின் நடவடிக்கை கண்டு கவலை அடையலாம். மே மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் சமூக வேலைகளில் ஈடுபாடு ஏற்படும், அப்போது கவனமுடன் செயல்பட வேண்டும்.
- மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய வளங்களைக் கொடுக்கப் போகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வருகின்ற வருடத்தில் கடினமாக உழைக்கத் தயாராவது ஒன்று மட்டுமே. அதற்கான சிறந்த பலன்களை இந்த ஆண்டு உங்களுக்குத் தரும்.
ரிஷபம்
- இந்த 2022 ஆம் ஆண்டு வரும்போதே ரிஷப ராசியினருக்கு நற்செய்தியோடு வருகிறது. இந்த ஆண்டு உங்களின் அதிர்ஷ்டம் பலமடைகிறது, எனவே போன ஆண்டு செய்த வேலைகளின் தொடர்ச்சி இந்த ஆண்டில் இன்னும் பலமடைந்து உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல லாபங்களை அடைவதற்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொடுக்கும். ஒருவேளை நீங்கள் தொழில் புரிபவராக இருந்தால், உங்கள் தொழிலும் வருமானமும் படிப்படியாக முன்னேற்றம் அடையும்.
- உங்களின் பல கனவுகள் இந்த ஆண்டில் நிஜமாகும். நீங்கள் செல்ல வேண்டுமென்று நினைத்த இடங்களுக்கெல்லாம் இந்த ஆண்டு செல்லலாம். வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு இந்த ஆண்டின் நடுப்பகுதியில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், எனவே முயலவும்.
- இந்த ஆண்டின் நடுப்பகுதியில், குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடல்நிலை குறைபாட்டால் உங்களின் கவலை அதிகரிக்கும், இருப்பினும் காலப்போக்கில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
- நீங்கள் பணிபுரியும் இடத்தில் மிகவும் பொறுமையாகச் செயல்படுவீர்கள். ஏப்ரல் மாதத்தில் நிகழும் சனிபகவானின் பெயர்ச்சி உங்களை எதிலும் இன்னும் அதிகமாக முயற்சிக்க வைக்கும். உங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள், உங்கள் குணநலனும் மேம்படும். இந்த ஆண்டு உங்களின் உடல்நிலையில் ஏற்ற இறக்கம் இருக்கலாம், உங்கள் உணவின் மீது கவனம் தேவை.
- நீங்கள் இந்த ஆண்டு புதிது புதிதாக நிறைய விஷயங்களைக் கற்று உங்களின் ஆளுமையைப் பலப்படுத்திக்கொள்வீர்கள். கோள்களால் ஏற்படும் ஜோதிட மாற்றத்தால் உங்களின் நடத்தையிலும் சில மாற்றங்கள் ஏற்படும். உங்கள் ராசியிலிருந்து புறப்படும் ராகுவால் உங்களுக்கு நன்மை மட்டுமே ஏற்படும்.
- கடந்த ஆண்டில் இருந்துவந்த மனஅழுத்தம் இந்த ஆண்டில் படிப்படியாகவே குறையும், அதுவரை எதிலும் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம்.
- உங்கள் உறவுகள் வலுப்படும், உங்கள் தொழில்துறையிலும் வெற்றிபெறுவீர்கள். மே மாதத்திற்குப் பிறகு உங்கள் அலுவலகத்தில் அதிக மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள், சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.
- இந்த ஆண்டு நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் உங்கள் மன உறுதியை அதிகரிக்கும், புதுப்புது மனிதர் நிறைய பேருடன் தொடர்புகொள்ள வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு அளப்பரிய தனலாபங்களையும் தொழில் விருக்தியையும் பலதரப்பட்ட மக்களின் தொடர்புகளையும் வழங்கக்கூடியதாக அமைகிறது.
மிதுனம்
- இந்த 2022 ஆம் ஆண்டு மிதுன ராசியினருக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைகிறது. நீங்கள் இந்த ஆண்டு உச்ச எல்லையை எட்டப்போகிறீர்கள். நீங்கள் மாணவர்களாக இருந்தால், இந்த ஆண்டு உங்களுக்கான ஆண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை. உங்கள் கடின உழைப்பு பாடத்தின் மீதான கவனம் ஒருமனதாக படிப்பில் ஆர்வம் காட்டுதல் போன்றவை காரணமாக நீங்கள் வெற்றியடைவீர்கள்.
- இதனால் நீங்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வீர்கள். நீங்கள் தொழில் புரிபவராக இருந்தால், அதிகப்படியான லாபத்தைப் பெறுவீர்கள். நீங்கள் பணிபுரிபவராக இருந்தால், உங்கள் கடின உழைப்பாலும் ஆர்வத்தாலும் உங்கள் முதலாளியின் மனதில் நம்பிக்கையானதொரு இடத்தைப் பிடிப்பீர்கள்.
- உடல்நலம் குறித்த உங்களின் சாதாரண மனப்பான்மை பெரிய அளவில் பிரச்சனையை ஏற்படுத்திவிடும், எனவே இந்த ஆண்டு உங்கள் உடல்நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை வியாழன் உங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பார். இருந்தாலும் இந்த ஆண்டு உங்களின் செலவுகளைக் குறைப்பதென்பது பெரிய சவாலாக இருக்கும். அதிக செலவால் நிதிநிலை மோசமடைந்தால் உங்களுக்குப் பல தொந்தரவுகள் ஏற்படும்.
- உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமையைக் கண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சொந்தங்கள் இணைவதால் மனமகிழ்ச்சியுடன் நிம்மதியும் ஏற்படும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சனிபகவானின் பெயர்ச்சியால் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் வெற்றிபெறமுடியாத நிலை ஏற்படலாம், இது உங்களுக்குக் கொஞ்சம் கடினமான காலகட்டமாகவே இருக்கும். இதற்காக பயப்படத் தேவையில்லை.
- படிப்படியாக நிலைமைமாறி வெற்றி கிட்டும். உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இந்த ஆண்டு பல பயணங்களுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இந்த ஆண்டு புனித யாத்திரை பலமுறை செல்லக்கூடிய வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கும்.
- இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நீங்கள் உங்கள் எதிரிகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவர்கள் உங்களுக்கு எதிராக பல செயல்களைச் செய்ய காத்திருக்கிறார்கள். நீங்கள் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருந்தால் நீங்கள் பாதுகாக்கப்படலாம். இவை அனைத்தும் இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை மட்டுமே, பிறகு நிலைமை மாறி எதிரிகளும் நண்பராகலாம், இது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். அதனால் கவலைகொள்ள வேண்டாம்.
- உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். மொத்தத்தில் இந்த ஆண்டு நீங்கள் உங்களின் தன்னம்பிக்கையால் எதிரிகளை வென்று வெற்றிவாகை சூட்டக்கூடிய அற்புத ஆண்டு.
கடகம்
- இந்த 2022 ஆம் ஆண்டு கடக ராசி நேயர்களுக்கு மதிப்பும் மரியாதையும் பெறக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், நீங்கள் எதிர்பாரத அளவிற்கு லாபம் கிடைக்கும். நீங்கள் வேலை செய்பவராக இருந்தால், மெதுவாக செய்வீர்கள் ஆனால் உறுதியாக செய்து முடிப்பீர்கள் மற்றும் அதற்கான ஊதியம் கிடைக்கும்.
- நீங்கள் அதிகமாக பயணம் செய்வீர்கள். நீங்கள் செய்யும் வேலை பாராட்டப்படக் கூடியதாக இருக்கும். மக்கள் பார்வையில் உங்கள் பணியின் மதிப்பு கூடும். இந்த வருடத்தில் நீங்கள் மென்மேலும் வளர்வதற்கு உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வருடத்தின் மத்தியில் குடும்பத்தில் மூத்தவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், நீங்கள் சில கவலைகளுக்கு உள்ளாகலாம்.
- இந்த ஆண்டு நீங்கள் சில புதிய விஷயங்களை முயற்சி செய்வீர்கள். சில புதிய திட்டங்கள் தொடங்க வாய்ப்புள்ளது, இது உங்கள் சிந்தனை முறையை முற்றிலும் மாற்ற வாய்ப்புள்ளது. நீங்கள் வாழ்க்கையில் சரியாகவும் தவறாகவும் என்ன செய்தீர்கள் என்பதைப் பற்றி சுயபரிசோதனை செய்து சிந்திக்க வாய்ப்புள்ளது.
- ஏப்ரல் மாதம் நான்கு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி ஏற்படுகிறது, இது நீங்கள் சிறப்பாக முடிவுகளை எடுக்க உதவும். இருப்பினும், எட்டாம் வீட்டில் சனிபகவானின் பெயர்ச்சி காரணமாக, சில உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ராகு, கேது ஏப்ரல் மாதம் உங்கள் நான்காவது மற்றும் பத்தாவது வீட்டைக் கடந்து செல்லும். இந்த ஆண்டின் கடைசி பகுதியில் கைத்தொழில் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- ஏப்ரலுக்குப் பிறகு குருவின் பெயர்ச்சி வேலையில் உள்ளவர்களுக்கு நல்ல நேரத்தைக் கொண்டு வரும். இந்த ஆண்டு உங்களின் ஆர்வம் ஜோதிடம் அல்லது தொல்லியல் முக்கியத்துவம் பற்றிய விஷயத்தில் இருக்கலாம். மொத்தத்தில் இந்த ஆண்டில் ஆன்மீக விஷயங்களில் நீங்கள் தீவிரமாக பங்கேற்கவும், உங்கள் நற்பெயர் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது, மேலும் பல நல்ல செயல்களால் உங்கள் பெயரை உயர்த்தக் கூடிய நல்ல ஆண்டாக அமையப் போகிறது. மேலும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
சிம்மம்
- சிம்ம ராசி நேயர்களே, இந்த 2022 ஆம் ஆண்டு உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கக் கூடிய ஆண்டாக உள்ளது. உங்கள் மீதான நம்பிக்கை உங்களுக்கு மீண்டும் வரும். இந்த ஆண்டு தொழில் செய்பவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் எல்லா விதத்திலும் உயரங்களை அடையலாம். இருப்பினும், இந்த ஆண்டு உங்கள் ஜாதகத்தின் ஏழாவது வீட்டில் சனிபகவான் வருகையால் உங்களுக்கும் உங்கள் தொழில் பார்ட்னர்களுக்கும் இடையே வேறுபாடுகளை உருவாக்கலாம்.
- அதே நேரத்தில் மனைவியுடனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதிரீதியாக நீங்கள் மிகவும் முன்னேறியவராக இருந்தாலும், நீங்கள் திறமையான நிதி நிர்வாகத்தைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், நீங்கள் சம்பாதித்த அனைத்து பணமும் தேவையற்ற முறையில் செலவு செய்யப்படும்.
- இந்த ஆண்டு முயற்சி செய்தால், நிலம் மற்றும் ரியல் எஸ்டேட்களை உங்களால் வாங்க முடியும். அதனால் உங்கள் தொழில் நிறுவனத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆண்டின் நடுவில் உங்கள் வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அதனை கவனித்துக் கொள்ளுங்கள், இதனால் நன்மை ஏற்படும்.
- நீங்கள் வெளிநாடு செல்லத் தயாராக இருந்தால், பிப்ரவரி மற்றும் மே முதல் ஜூன் வரையிலான மாதங்களில் வாய்ப்புகள் வரலாம். பிப்ரவரி மாதத்தில் உங்கள் உடல்நலத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மே மாதத்திலும் ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலும் உடல்நலத்தில் குறைபாடு ஏற்படலாம்.
- குடும்பத்தில் மூத்தவர்களின் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளதால் வீட்டின் நிலை சற்று மோசமடையக்கூடும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் சிறிது கவனம் தேவை. சில விஷயத்திற்காக வீட்டில் சண்டை வரலாம். இதன் காரணமாக, நீங்கள் மனதளவில் கொஞ்சம் அமைதியற்றவராக இருப்பீர்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், இந்த சூழ்நிலைகளில் இருந்து வெளிவரலாம்.
- நீங்கள் உங்கள் மைத்துனர் மூலம் பெரிய நன்மை பெற வாய்ப்பு உள்ளது, மற்றும் அவரின் வழிகாட்டல் உங்கள் வேலையில் நீங்கள் முன்னோக்கிச் செல்ல உதவியாக இருக்கும். நீங்கள் எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் உங்கள் மைத்துனரின் பங்களிப்பு இருக்கும். மொத்ததில் இந்த ஆண்டு நீங்கள் தைரியத்துடன் சவால்களை எதிர்கொள்ளவும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கக் கூடிய நல்ல ஆண்டாக அமைகிறது.
கன்னி
- கன்னி ராசியினர் பொதுவாக அதிபுத்திசாலியாகவும் சுறுசுறுப்புடனும் இருப்பார்கள் மற்றும் தங்கள் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கும் கெட்டிக்காரர்களும் கூட. இந்த 2022 ஆம் ஆண்டின் படி பார்க்கையில் கோள்கள் அனைத்தும் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால் இந்த ஆண்டு உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப்போகிறது. இதனால் உங்கள் வேலைகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடிக்கும் வல்லமை கிடைக்கும்.
- நீங்கள் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள், அது உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குருபகவான் மீன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார், அப்போது உங்களுக்கு நற்செய்தி கொண்டுவருகிறார். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்குமான உறவு பரஸ்பர உறவாக இருக்கும். பொதுவாக உங்கள் குடும்பத்தின்படி பார்க்கையில் சொந்தங்களுக்கு இடையே அன்பும் அக்கறையும் பொங்கும்.
- உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றால் இந்த ஆண்டு அதற்கான வாய்ப்புகள் கூடிவரும். வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு இந்த 2022 ஆம் ஆண்டில் மார்ச் முதல் ஏப்ரல் வரையும் அதைத் தவர விடுவோருக்கு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையும் வாய்ப்புகள் வரும். உங்களுக்கு உறுதுணையாக உங்கள் நண்பர்கள் இருப்பார்கள், இருப்பினும் சில நேரங்களில் உங்கள் நண்பர்களே உங்களுக்குப் பிரச்சனையாகவும் இருப்பார்கள்.
- அவர்களுடனான உங்கள் உறவு கெடும் அளவிற்குப் போகலாம். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்கள் வேலையில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும், ஏனெனில் உங்களின் சிறிய தவறால் பெரிய இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் உயர் அதிகாரிகளிடம் கீழ்படிந்து நடக்க வேண்டும்.
- ஜூன் மாதமும் ஜூலை மாதமும் உங்கள் நுண்ணறிவு நன்கு செயல்படும் அந்த சமயத்தில் உங்களின் கடினமான வேலைகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். இது உங்கள் பணியிடத்தில் உங்களைத் தனிச்சிறப்புடன் காட்டும். உங்களுக்கு பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். இருப்பினும் மே மாதத்திற்குப் பிறகு, உங்கள் எதிரிகள் உங்களைத் துன்புறுத்த முயற்சிசெய்யலாம் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
- உங்கள் ஆர்வம் தொல்பொருளியல் பற்றி அறிந்துகொள்வதிலும் அதை ஆராய்வதிலும் இருக்கும், அதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இதன் மூலம் புதிதாக பல விஷயங்களைக் கற்றறிவீர்கள். குழந்தைகள் சார்ந்த குழப்பங்கள் ஏற்படலாம். மொத்தத்தில் இந்த ஆண்டு உங்களுக்குப் பல விஷயங்களைக் கற்றறிந்து செயல்படக்கூடிய மிதமான ஆண்டாக இருக்கும்.