தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: இன்றைய (ஏப்ரல் 25) ராசி பலன் - இன்றைய ராசி பலன்

TODAY HOROSCOPE: மேஷம் முதல் 12 ராசியினருக்கு இன்றைய (ஏப்.25) ராசி பலன்களை காண்போம்.

Horoscope April 25  ஏப்ரல் 25 ராசி பலன் இன்றைய ராசி பலன் astrological-predictions-for-the-day-april-25-in-2022
Horoscope April 25 ஏப்ரல் 25 ராசி பலன் இன்றைய ராசி பலன் astrological-predictions-for-the-day-april-25-in-2022

By

Published : Apr 25, 2022, 6:37 AM IST

மேஷம் :எதிர்காலத்தைப் பற்றிய முடிவெடுக்கும்போது, பொது அறிவுடன் சிந்தித்து அதை செயலாற்றுவது நன்மையைத் தரும். திட்டங்களை தீட்டவும், கணக்கீடுகளை உருவாக்கவும், ஜோதிட கணிப்பை அறிவுறுத்தலாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் பொது அறிவின் அடிப்படையில் இறுதி முடிவை எடுங்கள்.

ரிஷபம் :வாதங்களாலும், விவாதங்களுமே இன்றைய தினம் நிறைந்திருக்கும். இன்று பிற்பகலில் வணிக விவாதங்களை நண்பர்களுடன் மேற்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. மாலையில், உங்கள் மனதிற்கு நெருக்கமனவர்களிடமிருந்து சிறப்பான கவனிப்பு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

மிதுனம் :இன்று, பிரச்சினைகளை தீர்ப்பது என்பது கடுமையான பணியாக இருந்தாலும் கூட, உங்களால் அதை நிறைவேற்ற முடியும். அதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், நம்பிக்கை இழக்கவேண்டாம், உறுதியும் கடின உழைப்பும் பலனளிக்கும். உங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களையும், சுற்றியுள்ளவர்களையும் நன்றாக புரிந்து கொள்ள முடியும். உங்கள் காதல் துணையை ஷாப்பிங் அழைத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கடகம் :இன்றைய தினம், நீங்கள் கடுமையாக நடந்து கொள்ள நேரிடலாம். பிற்பகலில் உங்கள் தொழில் கூட்டாளிகளுடன் நேரத்தை செலவிட நேரலாம், உங்கள் அதிகாரத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினால், முக்கியமான ஒரு ஒப்பந்தத்தை இன்று முடிக்க முடியும். இன்று வாழ்க்கைத் துணை, அன்பை பொழிந்து உங்களை திக்குமுக்காட வைப்பார்.

சிம்மம் :இன்று உங்கள் கொள்கைகளில் சமரசம் செய்ய வேண்டாம். அதன் விளைவாக உங்களுக்கு ஆத்ம திருப்தி ஏற்படும். ஆனால் இணக்கமான அணுகுமுறையை கைவிட வேண்டாம். தொழில்முறை விவகாரங்களில் நிதர்சனமான, வர்தகரீதியான அணுகுமுறையை தொடர்வது நன்மையளிக்கும்.

கன்னி :இன்று ஏற்படும் சில சிக்கல்களால் நீங்கள் எரிச்சலடையக்கூடும். உங்களுடைய ஆளுமையை மேம்படுத்துவதற்கான ஒரு படிப்பை நீங்கள் தொடர்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. நெருக்கமான உரையாடல், உடல்ரீதியான இனிய அனுபவத்திற்கு உங்களை இட்டுச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

துலாம் :அரசாங்கம் தொடர்பான வேலைகள் இன்று உங்களுக்கு நன்மையளிக்கும். உடன்பிறந்தவர்களுடன் உங்கள் உறவு நெருக்கமாகும், நெருங்கிய நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட முடியும்.

விருச்சிகம் :மூத்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இன்று முழு நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும். உணர்ச்சிபூர்வமான நீங்கள் அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்கள் கொள்கைகளையும் விட்டுக் கொடுப்பீர்கள். வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்க ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று மாலை நேரத்தில் திருமணத்திற்காக வரன் வரலாம்.

தனுசு :இன்று எதுவும் முழுமையாக, ஆக்கப்பூர்வமாக செய்யமுடியாமல் போனாலும், அது நாளைக்கான உறுதியான முன்னேற்பாடாக இருக்கும். பகுதி நேர பயிற்சியில் சேர்ந்து, உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்குள் புதைந்திருக்கும், நீங்களே அறியாத திறமையை வெளிக்கொண்டு வரலாம். உங்கள் ஆசைகளை உயிர்ப்புடன் வைத்தால் அவை வெற்றி பெறலாம்.

மகரம் :இன்று உங்கள் மனதில் காதல் எண்ணங்கள் அதிகமாக தோன்றும். நினைவுகளை பின்னோக்கி அசைபோட்டு, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கழித்த சில பொன்னான நேரத்தை எண்ணி நெகிழ்ந்து போவீர்கள். உங்கள் பழைய நண்பர்களை அழைத்து, அந்த பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில்ரீதியாக பார்த்தால், முக்கியமான லட்சியங்களை அடைவீர்கள். ஒட்டுமொத்தமாக சொன்னால், இன்றைய நாள் உங்களுக்கு பொன்னான நாள்.

கும்பம் :உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும்! நீங்கள் வாங்கிய பொருட்கள் பற்றி நினைவில் வைத்திருக்காமல், ஆசைகளை பூர்த்தி செய்ய பயன்பட்ட கிரடிட் கார்டுகளை திட்டுவீர்கள். இருந்தாலும், இந்த அனுபவம், திட்டமிடுவது பற்றி உங்களை சிந்திக்கவும், ஒழுங்கமைக்கவும் தூண்டலாம். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

மீனம் :இன்றைய தினம், உங்களுக்கு தேவையற்ற கவலை இருக்காது. அதிக சகிப்புத்தன்மையும், தாராள மனத்துடன் இருப்பீர்கள் என்பதால் பிறரை மன்னிப்பீர்கள். இது மிகவும் நல்லது, ஆனால் பிறர் தேவைக்கு அதிகமாக உங்களை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இதையும் படிங்க:New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ABOUT THE AUTHOR

...view details