டெல்லி:உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பொதுக்கூட்டம், பேரணி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜன.22ஆம் தேதி வரை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை ஜன.8 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதே நாளில், ஒமைக்ரான் மற்றும் கோவிட்-19 பாதிப்புகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஜன.15 வரை பொதுக்கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது.