தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: நந்திகிராமில் மம்தா!

கொல்கத்தா: மேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று (ஏப். 1) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அஸ்ஸாமில் 39 தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

assembly-elections-2021-phase-2-voting-polling-in-west-bengal-assam
assembly-elections-2021-phase-2-voting-polling-in-west-bengal-assam

By

Published : Apr 1, 2021, 6:59 AM IST

Updated : Apr 1, 2021, 9:34 AM IST

சட்டப்பேரவைத் தேர்தல் 2021 மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாவும், அஸ்ஸாமில் மூன்று கட்டங்களாகவும் நடைபெறுகிறது. அதன்படி, மார்ச் 27ஆம் தேதி அஸ்ஸாமின் 47 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தின் 30 தொகுதிகளுக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இன்று (ஏப்.1) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அஸ்ஸாமில் 39 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. மேற்கு வங்கத்தில், பாசிம் மேதினிபூர், பூர்பா மேதினிபூர், தெற்கு 24 பர்கானாஸ், பாங்குரா ஆகிய நான்கு மாவட்டங்களிலும், அஸ்ஸாமில் மத்திய மற்றும் கிழக்கு பகுதியிலுள்ள 13 மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.

இதில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடக்கம். அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய இவர், கடந்த டிசம்பர் அக்கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மம்தா Vs அதிகாரி: நாளை நந்திகிராமில் வாக்குப்பதிவு

Last Updated : Apr 1, 2021, 9:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details