தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

6 மாநிலங்களின் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

சட்டமன்ற உறுப்பினர்களின் இறப்பு, தகுதி நீக்கம் மற்றும் ராஜினாமா போன்ற காரணங்களால் 6 மாநிலங்களில் காலியான 7 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

6 மாநிலங்களின் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
6 மாநிலங்களின் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

By

Published : Nov 3, 2022, 9:53 AM IST

பல்வேறு காரணங்களால் மகாராஷ்டிரா, ஹரியானா, பிகார், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காலியான 7 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ 3) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அந்தேரி கிழக்கு (மகாராஷ்டிரா), அடம்பூர் (ஹரியானா), முனுகோடு (தெலங்கானா), கோலா கோக்ரநாத் (உத்தரபிரதேசம்), தாம்நகர் (ஒடிசா), பிகார் மாநிலத்தின் மோகாமா மற்றும் கோபால் கஞ்ச் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில் தெலங்கானாவில் கோமதி ரெட்டி ராஜகோபால் ரெட்டி என்பவர் பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது முனுகோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல் அடம்பூர் தொகுதி எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் அந்தேரி கிழக்கு, கோலா கோரக்நாத், தாம்நகர், கோபால் கஞ்ச் ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்கள் பதவியில் இருக்கும்போது காலமாகினர். அதேநேரம் மோகாமா ஆர்ஜேடி எம்எல்ஏ அனந்த் குமார் சிங் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முனுகோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details