அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர்.முதற்கட்ட சுற்றுமுடிவுகளில், பாஜக கூட்டணி 74 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 43 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகிறது.
அசாம் தேர்தல்: ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலை - ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலை
அசாமில் உள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில், அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 5 ஆயிரம் வாக்குகளில் முன்னிலை வகித்து வருகிறார்.
ஹிமந்தா பிஸ்வா சர்மா
ஜலுக்பரி தொகுதியில் போட்டியிட்ட அசாம் சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 5 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அதே போல, மஜூலி தொகுதியில் போட்டியிட்ட அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் 3000க்கும் மேற்பட்ட வாக்குகளில் முன்னிலை வகித்துவருகிறார்.