அசாம் மாநிலம், நகோவன் மாவட்டத்தில் உள்ள ராஹ எனும் பகுதியைச் சேர்ந்தவர் நிஹாரிகா தாஸ். 24 வயதானா நிஹாரிகா தாஸின் கணவர், அருகேயுள்ள சிலிகுரி மாவட்டத்தில் வேலை செய்துவருகிறார்.
சொந்த ஊரான ரேஹாவில் உள்ள தனது கணவரின் குடும்பத்தையும் நிஹாரிகா பார்த்துக்கொள்கிறார். நிஹாரிகாவின் மாமனார் துலேஷ்வர் தாஸுக்கு அன்மையில் கோவிட்-19 அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவரது உடல்நிலை எழுந்து நடக்க முடியாத அளவிற்கு மோசமடைந்த நிலையில், அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்ல நிஹாரிகா முடிவெடுத்தார்.
அவரது வீட்டிற்கு வாகனங்கள் செல்லக்கூடிய வசதியில்லாததால், மாமனார் துலேஷ்வரை தனது தோளிலேயே சுமந்து, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பரிசோதனையில் கோவிட்-19 தொற்று உறுதியான நிலையில், அவரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வாகனத்தில் கூட்டிச் சென்ற நிஹாரிகா, தொடர்ந்து மருத்துமனையின் மூன்றாவது மாடி வரை மாமனரை தன் தோளிலேயே சுமந்து சென்று அனுமதித்துள்ளார்.
துலேஷ்வரை, நிஹாரிகா தோளில் சுமந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்தப் புகைப்படத்தை வேகமாகப் பகிர்ந்து இச்சம்பவம் குறித்து பலரும் விவாதித்து வருகின்றார். தற்சமயம் நிஹாரிகாவுக்கும் கோவிட்-19 தொற்று உறுதியாகி சிகிச்சையில் உள்ளார்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் ஒரே நாளில் ரூ. 7 கோடிக்கு மது விற்பனை