மோரிகான்: கடந்த ஜூலை மாதத்தில் அஸ்ஸாம்மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த முப்தி முஸ்தபா என்பவர், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், சில பயங்கரவாதிகளுக்கு அவரது மதரஸாவில் அடைக்கலம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார், அவருக்கு சொந்தமான மதரஸா இடிக்கப்பட்டது. இதேபோல் அடுத்தடுத்து மூன்று மதரஸாக்கள் இடிக்கப்பட்டன.
அல்காய்தா பயங்கரவாதிகளின் மையமாக மதரஸாக்கள் செயல்பட்டதன் காரணமாகவே அவை இடிக்கப்பட்டதாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா தெரிவித்தார். அசாமில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அசாம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு, பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர்களை கைது செய்து வருகின்றனர். குறிப்பாக சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.