கவுகாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர்களின் ராகிங் காரணமாக ஜூனியர் மாணவர் விடுதியின் 2ஆவது மாடியிலிருந்து குதித்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பல்கலைகழகத்தில் வணிகவியல் படித்துவரும் ஆனந்த் என்ற மாணவரை 2 நாள்களுக்கு முன்பு அவரது சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அப்போது ஆனந்த் அங்கிருந்து ஓடிச்சென்று 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்கொலைக்கு தூண்டிய சீனியர் மாணவர்களை கைது செய்ய வேண்டும் என்று திப்ருகர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று (நவம்பர் 28) கூறுகையில், ராகிங் காரணமாக திப்ருகர் பல்கலைக்கழக மாணவர் படுகாயமடைந்துள்ளார்.