இதுகுறித்து அஸ்ஸாம் மாநில தலைமைச் செயலாளர் ராஜேஷ் பிரசாத் இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், 'முதல் தவணையாக அஸ்ஸாம் மாநிலத்தில் தலைநகர் கெளகாத்தியில் மட்டும் ஆன்லைன் மதுவிற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப்பரவலைக்கட்டுப்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்றமும் சென்னை உயர் நீதிமன்றமும் இதுதொடர்பாக, ஆன்லைன் விற்பனை உட்பட எந்தவொரு வகையிலும் மதுவிற்பனை செய்யக்கூடாது எனத் தெரிவித்தது.
முன்னரே பிறமாநிலங்களில் ஆன்லைன் மது விற்பனை
ஆனால், மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், டெல்லி, கர்நாடகா, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் முன்னரே ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டு, மது பாட்டில்கள் வீடுகள்தோறும் டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அஸ்ஸாம் கலால் விதிகளில் திருத்தம்(2021) செய்யப்பட்டு, ஆன்லைன் மது விற்பனை மற்றும் டோர் டெலிவரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தகுதிவாய்ந்த சில்லறை விற்பனையாளர்கள், இதுதொடர்பான அரசின் செயலியில் பதிவு செய்து, முறையான உரிமம், இருப்பிட வளாகம், டெலிவரி செய்யும் நபர்களின் பெயர்ப் பட்டியல், முகவரி, தொலைபேசி எண், புகைப்படங்கள் மற்றும் சில குறிப்புகளை அதில் இணைக்க வேண்டும்.