கவுகாத்தி:அஸ்ஸாமைச் சேர்ந்த ஆறு வயது, ஐந்து வயது சகோதரர்கள் நரேந்திர மோடி, ஹிமாந்த பிஸ்வா சர்மாவுக்கு எழுதிய விசித்திரமான கடிதம் இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறுவர்கள் இருவரும் தங்களுக்குப் பல் வேகமாக வளரவில்லை என்றும், அதனால், தங்களுக்கு விருப்பமான உணவை உண்ண முடியவில்லை எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் எனவும் அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர். இதனை, அவரது மாமா ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். இந்தக் கடிதத்தைப் பலரும் இணையத்தில் பகிர்ந்த நிலையில், அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சிறுவர்களின் கடிதத்திற்குப் பதில் அளித்து ட்வீட் செய்துள்ளார்.