தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் கொடூரக் கொலை.. மனித தலை உடன் சுற்றித்திரிந்த நபர் கைது.. - ஜோர்ஹாட் கொலை வழக்கு

அஸ்ஸாம் மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட நபரின் தலை உடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அஸ்ஸாமில் கொடூரக்கொலை
அஸ்ஸாமில் கொடூரக்கொலை

By

Published : Feb 22, 2023, 3:42 PM IST

ஜோர்ஹாட்:அஸ்ஸாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள தியாக் பகுதியில் நேற்றிரவு (பிப். 21) தலையில்லாத உடல் கிடப்பதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவியிடத்துக்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளங்கள் குறித்து விசாரணை தொடங்கியது.

அதோடு காணாமல்போன தலையை தேடும் பணியில் போலீசார் இரவு முழுவதும் ஈடுபட்டிருந்தனர். இன்று (பிப். 22) துண்டிக்கப்பட்ட மனித தலை உடன் இளைஞர் ஒருவர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அந்த இளைஞரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இவர் பையில் வைத்திருந்த மனித தலை மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவரிடம் விசாரணை நடந்துவருகிறது. இதுகுறித்து போலீசார் தரப்பில், கொலை செய்யப்பட்ட நபர் தியோக்கை சேர்ந்த லோகித் கோகோய்(28) என்பதும், அவரை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (20) என்பதும் தெரியவந்துள்ளது.

லோகித் கோகோய் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். இதனால் அடிக்கடி அனைவரிடமும் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கோகோய், அருண்குமார் உள்ளிட்ட சிலர் நேற்றிரவு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இந்த தகராறு காரணமாக கொலை நடந்துள்ளது. இந்த கொலைக்கு தகராறு காரணமாக அல்லது முன்விரோதம் உள்ளதா என்பது அடுத்தக்கட்ட விசாரணையில் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:திருமண வரவேற்பின்போது கொடூரம்.. ஒரே அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுமணத் தம்பதி.. குடும்பத்தார் அதிர்ச்சி..

ABOUT THE AUTHOR

...view details