டெல்லி:அஸ்ஸாம்-மேகாலயா எல்லையில் உள்ள முக்ரோக் சோதனை சாவடி வழியாக லாரியில் சட்டவிரோதமாக மரக்கட்டைகள் கொண்டுசெல்லப்பட்டன. இதனால் சோதனை சாவடி போலீசார் லாரி ஓட்டுநர் உள்பட 3 பேரையும் கைது செய்து ஜிரிகெண்டிங் காவல் நிலையத்தில் அடைத்தனர். இவர்களை விடுவிக்குமாறு மேகாலயாவிலிருந்து 50-க்கும் மேற்பட்ட மக்கள் ஆயுதங்களுடன் காவல் நிலையம் முன்பு குவிந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே வனக்காவலர் ஒருவரும் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அஸ்ஸாம்-மேகாலயா எல்லை பிரச்சனை காரணமாகவே நடந்ததாக செய்திகள் வெளியாகின.
அஸ்ஸாம்-மேகாலயா துப்பாக்கிச்சூடு எல்லை பிரச்சனை கிடையாது - முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா - மேகாலயாவில் இணைய சேவை முடக்கம்
அஸ்ஸாம்-மேகாலயா எல்லையில் நடத்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கும் எல்லை பிரச்சனைக்கும் எந்த தொடர்பு கிடையாது என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா டெல்லியில் இன்று (நவம்பர் 23) விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த சம்பவத்துக்கும் எல்லை பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது மரக் கடத்தல்காரர்களுக்கும், வனக் காவலர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே நடந்த மோதலாகும். துப்பாக்கிச்சூடு மற்றும் வனக்காவலர் கொலை செய்யப்பட்டதால், மத்திய ஏஜென்சிகள் விசாரணை நடத்த பரிந்துரைத்துள்ளோம். இதையும் எல்லை விவகாரத்தையும் தொடர்புபடுத்துவது நியாயமல்ல. இந்த சம்பவம் தொடர்பான அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:என்னை துண்டு துண்டுடாக வெட்டப்போவதாக மிரட்டினார்... ஷ்ரத்தாவின் புகார் கடிதம்...