தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவருக்கு இரண்டு வகை கரோனா தொற்று

அசாம் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மருத்துவர் ஒருவருக்கு இரண்டு உருமாறிய கரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே உடலில் இரண்டு வகை கரோனா தொற்றுகள்
ஒரே உடலில் இரண்டு வகை கரோனா தொற்றுகள்

By

Published : Jul 21, 2021, 12:45 PM IST

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மருத்துவர் ஒருவருக்கு ஆல்பா, டெல்டா என இரண்டு வகையான உருமாறிய கரோனா தொற்றுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர், மருத்துவர் பி.ஜே. போர்காகோட்டி கூறுகையில், "ஆல்பா, டெல்டா என இரண்டு வகை உருமாறிய கரோனா தொற்றுகள், மருத்துவர் ஒருவருக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவை மற்ற தொற்றை போல் இருக்கும். இந்த இரண்டு தொற்றுகள், பாதிப்பை பெரிதுபடுத்தும் என அஞ்சத்தேவையில்லை. இதை நாங்கள் தொடர்ந்து ஒரு மாத காலமாக கண்காணித்து வருகிறோம். மருத்துவர் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டது உண்மைதான்." என்றார்.

வடகிழக்கு மாநிலங்களில் கரோனா தொற்று தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் நிலையில், இதுபோன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் அசாமில் 6,500 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5,019 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆக்ஸிஜன் பற்றாக்குறை மரணங்கள் நிகழவில்லையா? அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் புகார்!

ABOUT THE AUTHOR

...view details