தமிழ்நாடு

tamil nadu

வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம் மாநிலம் - உயிரிழப்பு எண்ணிக்கை 134ஆக உயர்வு!

By

Published : Jun 28, 2022, 7:51 PM IST

அஸ்ஸாமில் மழை வெள்ளத்தால் நேற்று (ஜூன் 27) ஒரேநாளில் எட்டு பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 134ஆக அதிகரித்துள்ளது.

Assam Flood
Assam Flood

அஸ்ஸாம்: அஸ்ஸாமில் கடந்த சில வாரங்களில் பெய்த தொடர் மழையால் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பெக்கி, பக்லாடியா, கபிலி, பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றன. 2 ஆயிரத்து 254 கிராமங்களில், 21 லட்சத்து 52 ஆயிரத்து 415 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று(ஜூன் 27) ஒரேநாளில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 134ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12 லட்சத்து 20 ஆயிரத்து 112 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 774 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.

ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 194 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 74 ஆயிரத்து 655 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: கர்நாடகாவில் நில அதிர்வு - அசந்து தூங்கிய நாய் அலறிய காணொலி....

ABOUT THE AUTHOR

...view details