திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் 32 மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஜாலி, பக்சா, பர்பேட்டா, பிஸ்வநாத், போங்கைகான், கச்சார், தர்ராங், தேமாஜி, துப்ரி, திப்ருகர், டிமா ஹசாவ், கோல்பாரா, ஹோஜாய், கம்ரூப் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 31 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம் - இதுவரை 62 பேர் உயிரிழப்பு
அஸ்ஸாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் கனமழை வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாய் மாறியுள்ளன.
கச்சார் மாவட்டத்தில் உள்ள பராக் ஆற்றின் கரை அடித்துச் செல்லப்பட்டதால், அப்பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அசாம் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்தனர். இதில் 51 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்ததாவும், 11 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாகவும் அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செகந்திராபாத் கலவரத்துக்கு மூளையாக செயல்பட்டவர் கைது!