தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அசாமில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதி கொடூரமாக கொலை.. போலீஸ் தீவிர விசாரணை! - Assam Couple killed in sleep

Assam couple killed: அசாம் மாநிலத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதியை அடையாளம் தெரியாத கும்பல் கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 10:17 PM IST

துப்ரி (அசாம்):துப்ரி மாவட்டத்தில் உள்ள குர்சக்தி பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜஹால் ஹுசைன். இவரது மனைவி நர்ஜினா பேகம். இவர்களது, மகள் கவுகாத்தியில் வசித்து வருகிறார். இவர், தனது பெற்றோருக்கு நேற்று இரவு (ஆக.26) செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால், அவர்கள் செல்போனை எடுக்கவில்லை. பலமுறை தொடர்பு கொண்டபோதிலும் தம்பதி செல்போனை எடுக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மகள் இது குறித்து தனது உறவினருக்குத் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அப்போது, வீட்டில் படுக்கை அறையில் ஷாஜஹால் ஹுசைன் மற்றும் நர்ஜினா பேகம் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதனைக் கண்ட அவர்கள் உடனடியாக துப்ரி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், இருவரது சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்.. யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து காதலி வீட்டில் வீசிய இளைஞர் கைது!

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்ற கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தம்பதி தூங்கிக்கொண்டிருக்கும் போது கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை குறித்த விசாரணை நடந்து வருவதாகவும், தற்போது வரை கொலையாளிகளைக் காவல் துறையினர் கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தொடர்ந்து ஒரே பகுதியில் ஒரே மாதிரியாக இரண்டு தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:Toxic Gas Inhalation: விஷவாயு தாக்கி 3 விவசாயிகள் பலி.. கிணற்றில் இறங்கிய போது நேர்ந்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details