தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மிசோரம் எல்லை மோதல்- அஸ்ஸாம் முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு! - assam

அஸ்ஸாம் மிசோரம் எல்லை மோதல் நடைபெற்றநிலையில் அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா திங்கள்கிழமை (ஆக.9) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

Himanta Biswa Sarma
Himanta Biswa Sarma

By

Published : Aug 9, 2021, 9:16 PM IST

டெல்லி : அஸ்ஸாம்- மிசோரம் மாநில எல்லை சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விளக்கினார்.

இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பிஸ்வா சந்தித்து பேசினார். இது தொடர்பாக முதலமைச்சர் பிஸ்வாவுக்கு நெருக்கமான அலுவலர்கள் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “முதலமைச்சர் இருவருடனான உரையாடலின் போது மாநில எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க மற்றும் அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

மேலும், ஐஸ்வால் மற்றும் லைலாபூர் எல்லைப் பகுதியில் நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக உள்துறை அமைச்சரிடம் சர்மா கூறியுள்ளார்.

ஐஸ்வாலில், அஸ்ஸாம் அமைச்சர்கள் அதுல் போரா மற்றும் அசோக் சிங்கால் சமீபத்தில் மிசோரம் அரசுப் பிரதிநிதிகளைச் சந்தித்தனர், அதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இரு மாநில அரசுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்தன.

பிரதமர் மோடியைச் சந்தித்த பிறகு, போடோ சமாதான செயல்முறை, போதைப்பொருள்களுக்கு எதிரான அஸ்ஸாம் போர் மற்றும் மாநிலத்தில் பல்வேறு மத்திய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் முதலமைச்சர் விளக்கினார்” என்றார்.

இந்தச் சந்திப்பு குறித்து முதலமைச்சர் பிஸ்வாஸ் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, அஸ்ஸாமின் வளர்ச்சி விவகாரத்தில் அரசு எவ்வாறு கொள்கைகள் வகுத்து முன்னோக்கி செல்கிறது என்பதை தெரிவித்தேன்” என்றார்.

முன்னதாக பிஸ்வாஸ், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்தார்.

பாஜக தலைவர் நட்டாவுடனான சந்திப்பின் போது மாநில அரசின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து சர்மா விவாதித்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூலை 26ஆம் தேதி மிசோரம்- அஸ்ஸாம் மாநில எல்லையில் நடைபெற்ற வன்முறையில் காவலர்கள் கொல்லப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : மிசோரம் விவகாரம்- என்ஐஏ விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details