தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அசாம் படகு விபத்து - தொடரும் தேடுதல் பணி - அசாம் படகு விபத்து செய்திகள்

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற படகு விபத்தில் சிக்கி நதியில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மேலாண்மை குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

Assam boat tragedy
Assam boat tragedy

By

Published : Sep 11, 2021, 7:42 PM IST

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்தரா நதியில் இரு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 120க்கும் மேற்பட்டோர் சிக்கி பாதிப்புக்குள்ளாகினர்.

மீட்பு நடவடிக்கையில் பேரிடர் மேலாண்மை குழு உடனடியாக களமிறங்கிய நிலையில், இதுவரை 87 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இருவர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள நபர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.

இந்த படகுகள் மஜுலியிலிருந்து நிமாதிகாட்டிற்கும், நிமாதிகாட்டிலிருந்து மஜுலிக்கும் சென்றுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், மூன்று அலுவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்குப் பின் மாநிலத்தில் ஒற்றை இன்ஜின் படகுகளை பயன்படுத்த முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தடை வித்துள்ளார்.

இதையும் படிங்க:உ.பி தேர்தல் - நிர்வாகிகளுடன் பிரியங்கா காந்தி ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details