தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளைஞர் உயிரிழப்பு: காவல் நிலையத்திற்கு தீ வைத்த கும்பல்

அஸ்ஸாமின் நாகோன் மாவட்டத்தில் காவலில் இருந்த இளைஞர் உயிரிழந்ததால் கும்பல் ஒன்று காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காவலில் இருந்த இளைஞர் இறந்ததால், காவல் நிலையத்திற்கு தீ வைத்த  கிராம மக்கள்
காவலில் இருந்த இளைஞர் இறந்ததால், காவல் நிலையத்திற்கு தீ வைத்த கிராம மக்கள்

By

Published : May 21, 2022, 10:57 PM IST

அஸ்ஸாம்:நாகோன் மாவட்டத்தை சேர்ந்த சஃபிகுல் இஸ்லாம் என்பவர் நேற்று மே 20) இரவு படத்ராவாவிலிருந்து சிவ்சாகருக்கு சென்றபோது போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதையடுத்து அவர் காவல்நிலையத்துக்கு அழைத்துசெல்லப்பட்டார்.

மறுநாள் காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் அவரது குடும்பதாரிடம் தெரிவித்தனர். இதனிடையே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது குடும்பதார் தெரிவிக்கையில், "இஸ்லாமை விடுவிப்பதற்கு அவரது மனைவியிடம் 10,000 ரூபாய் லஞ்சமாக கேட்டதாகவும், பணம் செலுத்தவில்லை என்பாதல், குடும்பத்தார் முன்னிலையியேலே போலீசார் இஸ்லாமை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்" தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஒரு கும்பல் காவல் நிலையத்திற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டது. ஒரு கட்டத்தில் அந்த கும்பல் காவல் நிலையத்திற்கு தீவைத்தது. இந்த விபத்தில், காவல் நிலையத்தில் இருந்த இரண்டு காவலர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லீனா டோலி கூறுகையில், "இந்தச் சம்பவத்தில் தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளோம். தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை தேடி வருகிறோம், " என்று கூறினார்.

இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டருக்கு மானியம்.... தெரிந்து கொள்ள வேண்டியவை...?

ABOUT THE AUTHOR

...view details