தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கணவரின் இரண்டாவது திருமணத்தால் ஆத்திரம்... வீட்டுக்கு தீ வைத்த முதல் மனைவி... 4 பேர் உயிரிழப்பு! - பீஹார் மாநிலம்

கணவர் இரண்டாவது திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த முதல் மனைவி வீட்டிற்கு தீ வைத்ததில், நான்கு பேர் உயிரிழந்தனர்.

fire
fire

By

Published : May 15, 2022, 2:39 PM IST

தர்பங்கா: பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் சுபால் பஜார் பகுதியைச் சேர்ந்த குர்ஷித் ஆலம்(40) என்பவருக்கும், பீபி பர்வீன்(35) என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

பத்து ஆண்டுகள் கடந்தும் இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை என தெரிகிறது. இதனால் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குர்ஷித் ஆலம், ரோஷ்னி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இதற்கு பீபி பர்வீன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். தன் கணவரையும், அவரது இரண்டாவது மனைவியையும் அவ்வப்போது மிரட்டியும் வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (மே14) அனைவரும் வீட்டில் இருந்தபோது, பீபி பர்வீன் வீட்டை பூட்டி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.

இதில் பீபி பர்வீன் மற்றும் அவரது மாமியார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குர்ஷித் மற்றும் ரோஷினி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 50 வயது காதலனுக்கு 17வயது மகளை இரையாக்கிய தாய்.. வீட்டிலேயே நடந்த பிரசவம்..

ABOUT THE AUTHOR

...view details