ஹாங்சோ: இந்திய நீச்சல் வீரர்களான தானிஷ், விஷால் கிரிவால், ஆனந்த், ஸ்ரீ ஹரி நட்ராஜ் ஆகியோர் இணைந்து ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் ஆடவர் பிரிவிற்கான 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இந்திய அணியினர் தேசிய சாதனை படைத்துள்ளனர்.
இந்திய அணி ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் முந்தைய சாதனையாக 3:23.72 விநாடிகள் வைத்திருந்தன. தற்போது அதை முறியடிக்கும் விதமாக இன்றையப் போட்டியில் 3:21.22 விநாடிகள் பெற்று இந்திய நீச்சல் வீரர்கள் சாம்பியன் ஷிப் பட்டத்தைப் பெற்றுள்ளனர்.
நீச்சல் வீரர்களான தானிஷ், ஆனந்த் மற்றும் ஸ்ரீ ஹரி ஆகியோர் கடந்த 2019ல் நடைபெற்ற ஆடவர் பிரிவிற்கான 4 x 100 மீ போட்டியில் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆடவர் பிரிவிற்கான 4 x 100 மீ போட்டியில் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இந்திய அணியினர் ஹீட் 2 சுற்றில் சீனா, ஜப்பானுக்கு அடுத்தப்படியாக இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.