தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்: இறுதி போட்டியில் இந்தியா vs இலங்கை! சாம்பியன் யார்?

ஆசிய விளையாட்டு போட்டிக்கான மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் இன்று (செப்.25) இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதுகின்றன.

Asian Games Cricket Final
ஆசிய விளையாட்டு போட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 11:13 AM IST

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டிக்கான மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டி இன்று (செப்.25) பிங்ஃபெங் கேம்பஸ் (Pingfeng Campus Cricket Field,) கிரிக்கெட் மைதானத்தில் காலை 11.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதுகின்றன.

முன்னதாக ஆசிய விளையாட்டு தொடரின் மகளிர் கிரிக்கெட்டில், 3வது இடத்திற்கான போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய வங்கதேச மகளிர் அணி 18 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டு தொடரில் வங்கதேச மகளிர் அணி 3வது இடத்திற்கு முன்னேறியது. தொடர்ந்து காலை 11.30 மணிக்கு இந்தியா மகளிர் - இலங்கை மகளிர் இடையிலான ஆசிய விளையாட்டு போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய மகளிர் ஆசிய விளையாட்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலுமே வீராங்கனைகள் திறம்பட விளையாடி வருகின்றனர். இன்றைய ஆட்டத்திலும் இந்திய மகளிர் அதேபோல் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் ஷாபாலி வர்மா, ஜேமியா ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் இன்றைய ஆட்டத்தில் நிலைத்து நிற்கும் பட்சத்தில் இந்திய மகளிர் அணி கட்டாயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கான ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் போல் இன்றைய ஆட்டம் காணப்படுகிறது.

ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அந்த ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:Asian Games 2023: இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி தங்கம் வென்றது! உலக சாதனை படைத்த இந்திய வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details