ஹாங்சோ :19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் இன்று (செப். 23) தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆசிய போட்டி:தொடக்க நாளிலே இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். துடுப்பு படகு போட்டி ஆடவர் பிரிவில் இந்திய 8 வீரர் கொண்ட அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்திய அணி வீரர்கள் 5:43.01 நேரத்தில் பந்தைய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் :இந்திய மகளிர் அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது. மெஹுலி கோஷ், ரமிதா ஜிண்டால் மற்றும் ஆஷி சௌக்சே ஆகிய மூன்று பேரும் இணைந்து 1,886 புள்ளிகள் பெற்று, இரண்டாவது இடத்தை பெற்றனர். 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பதக்கத்திற்கான பிரிவில் இந்திய வீராங்கனை இடம் பெற்று உள்ளார். மேலும் இந்திய வீராங்கனைகல் மெஹுலி மற்றும் ரமிதாவும் அடுத்த சுற்றுக்குள் நுழைந்து உள்ளனர்.
தகுதி போட்டிக்கான அணியில் ரமிதா 631.9 புள்ளி பெற்று இரண்டாவது இடத்திலும், 630.8 புள்ளிகள் பெற்று மெஹுலி நாண்காவது இடத்திலும் உள்ளனர். ஹான் ஜியாயு, ஹுவாங் யூடிங் மற்றும் வாங் ஜிலின் மூன்று சீன வீராங்கனைகள் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் இறுதி போட்டிக்கு முன்னேறினர். மேலும், தென்கொரிய லீ யூன்சியோ, மங்கோலியாவின் கன்ஹுயாக் நந்தின்சாயா மற்றும் சீன தைபேயின் சென் சி ஆகிய மூன்று துப்பாக்கி சுடும் போட்டியாளர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஆடவர் படகு போட்டியில் இந்தியாவுக்கு பதக்க மழை :அர்ஜூன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் இணைந்து ஆண்களுக்கான மிதவை படகு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இந்திய அணி 6:28.18 நேரத்தில் வெற்றி இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. சீன அணி 6:23.16 நேரத்தில் வெற்றி இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றது. உஸ்பெஸ்கிஸ்தான் அணி வீரர்கள் ஷாக்சோட் நூர்மடோவ் மற்றும் சோபிர்ஜோன் சஃபரோலியேவ் ஆகியோர் இணைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
இந்தியா வென்ற பதக்கங்கள் விவரம்:ஆசிய போட்டிகள் தொடங்கியது முதல் தற்போது வரை இந்திய அணியினர் ஐந்து பதக்கங்களை வென்றனர். மூன்று வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கத்தை இந்திய வீரர்கள் இதுவரை வென்று உள்ளனர். மிதவை படகு போட்டியில் அர்ஜூன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் இணைந்து வெள்ளிப் பதக்கத்துடன் இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தனர்.
பாபு லால் யாதவ் மற்றும் லேக் ராம் ஆகியோர் இணைந்து படகு துடுப்பு போட்டியில் வெண்கலம் வென்றனர். துடுப்பு படகு போட்டி ஆடவர் பிரிவில் இந்திய 8 வீரர் கொண்ட அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. தனிநபர் ஏர் ரைபிள் 10மீ சூடுதல் போட்டியில் ரமிதா வெண்கலப் பதக்கத்தை வென்றார். 10மீ ஏர் ரைபிள் சூடுதல் போட்டியில் மெஹுலி கோஷ், ரமிதா ஜிண்டால் மற்றும் ஆஷி சௌக்சே இணைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
அடுத்தடுத்து நடைபெற உள்ள ஆசிய போட்டிகளில் இந்தியா நான்கு இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று உள்ளது. இதன் மூலம் தலா நான்கு தங்கம் அல்லது வெள்ளப்பதக்கங்கள் உறுதியாகி உள்ளன. நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் பால்ராஜ் பன்வார் ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் இறுதிப் போட்டியில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:Ind Women Vs Ban Women : ஆசிய விளையாட்டு போட்டி கிரிக்கெட் : அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய மகளிர்!