புதுச்சேரி:ஏம்பலம் கரிக்கலாம்பாக்கத்தில் பெண் ஆஷா பணியாளர்கள், புதுச்சேரியில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற வகையில் வீடு வீடாகச் சென்று வலியுறுத்திவருகின்றனர்.
இந்த நிலையில் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆஷா பணியாளர்கள் கூறிய நிலையில், குறிப்பிட்ட வீட்டிலிருந்த நபர்கள் ஆஷா பணியாளர்களைத் தகாத சொற்கள் கூறி தாக்க முயன்றுள்ளனர். இந்தச் சம்பவம் ஆஷா பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்காமல்
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்காமல், காவல் துறையினர் ஆஷா பணியாளர்களைக் கிராமப்புற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதற்குப் புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டுமொத்த ஆஷா பணியாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.