தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

11 வயது சிறுமி உயிரிழப்பு; பிகாரில் மூன்றாவது அலை? - 11 வயது சிறுமி

கோவிட் பெருந்தொற்று மூன்றாவது அலை குறித்து தேசிய பேரிடர் குழு நிறுவன வல்லுநர்கள் எச்சரித்துவரும் நிலையில் பிகாரில் 11 வயது சிறுமி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

covid
covid

By

Published : Sep 4, 2021, 11:44 PM IST

பாட்னா (பிகார்): பிகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 11 வயது சிறுமி ஒருவர் கோவிட் அறிகுறிகள் இருந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மூன்றே மணி நேரத்தில் அவர் இறப்பெய்தினார். இது மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிறுமி சிகிச்சையின்போது திடமாக இருந்துள்ளார்.

எனினும் அவருக்கு கோவிட் பாதிப்புகள் தீவிரமாக இருந்துள்ளன. இந்நிலையில் சிறுமி உயிர் பிரிந்தது. இதனை மருத்துவமனை நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாக தரப்பில் சிறுமி வியாழக்கிழமை (செப்.2) நள்ளிரவு கடும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

11 வயது சிறுமியின் உயிரிழப்பு மாநிலத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோரை பீதியடைய செய்துள்ளது. ஏனெனில் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் பாதுகாப்பு

இது தொடர்பாக மருத்துவர் நரேஷ் ரேகன் கூறுகையில், “கரோனா வைரஸிலிருந்து குழந்தைகள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இதற்காக மாநில அரசு 2 அல்லது 3 மாதங்கள் காத்திருந்து பள்ளிகளை திறக்கலாம். அதற்கு முன்னதாக பள்ளி குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

தடுப்பூசி

எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்த 11 வயது சிறுமி சியா ஆவார். இவருக்கு தனிமையறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல் மற்றொரு சிறுமியும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

மாநிலத்தில் 3.24 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். 65 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : அக்டோபர்- நவம்பரில் மூன்றாம் அலை?

ABOUT THE AUTHOR

...view details