புதிய கல்விக் கொள்கை 2020 அறிமுகம் செய்து இன்றுடன்(ஜூலை 29) ஓராண்டு நிறைவடைகிறது. இது தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "இன்றுடன் புதிய கல்விக்கொள்கை ஓராண்டை நிறைவு செய்கிறது. இந்நேரத்தில் நாட்டில் அனைவருக்கும் முறையான கல்வி சென்று சேர வேண்டும் என உறுதி பூணுவோம்.
21ஆம் நூற்றாண்டின் கனவான தற்சார்பு இந்தியாவை நிறைவேற்ற கல்வி முக்கிய பங்காற்றவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொலைநோக்குத் திட்டத்தில் இந்த புதிய கல்விக் கொள்கை உருவாகியுள்ளது. இது நாட்டின் கல்வித் தளத்தை முக்கியமாக மாற்றியமைக்கும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:NEETஇல் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு - பிரதமருடன் அமைச்சர் பூபேந்திர் யாதவ் சந்திப்பு