தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆர்யன் கான் பிணை மனு இன்று விசாரணை! - ஆர்யன் கான் பிணை

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் பிணை மீதான வழக்கின் விசாரணை இன்று மும்பை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

Aryan Khan
Aryan Khan

By

Published : Oct 11, 2021, 12:13 PM IST

மும்பை : நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், மும்பை அருகே சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்தில் கலந்துகொண்ட போது போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலர்களால் அக்.3ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஆர்யன் கானுக்கு நீதிமன்றம் 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஆர்யன் கான் பிணை கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (அக்.11) நீதிமன்றத்தில் நடக்கிறது. முன்னதாக ஆர்யன் கானுக்கு வெள்ளிக்கிழமை (அக்.8) நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்டது.

அப்போது நீதிமன்றத்திற்கு வெளியே ஷாருக் கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான் ஆகியோர் கண் கலங்கியப்படி காணப்பட்டனர். இந்நிலையில் கங்கனா ரணாவத் ட்விட்டரில் ஜாக்கி சான் மகன் விவகாரத்தை பகிர்ந்து நினைவுப்படுத்துகிறேன் எனப் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

அதில், “தன் மகன் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டான் என அறிந்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி, தன் மகனுக்கு விதிக்கப்பட்ட 6 மாதத் தண்டனையை மனமாற ஏற்றுக்கொண்டவர் ஜாக்கி சான். குற்றவாளிகளை மகிழ்விக்க கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : 'திராவிட மாடல்' நோக்கிச் செயல்படும் ஸ்டாலின் தலைமையிலான அரசு!

ABOUT THE AUTHOR

...view details