தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மது கடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது!

புதுச்சேரி: மதுபானம் கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

meeting
meeting

By

Published : Mar 3, 2021, 4:34 PM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி, இருமாநில எல்லைகளில் மதுபானம் கடத்துவதை கண்காணித்து, தடுப்பது தொடர்பாக தமிழக மது கடத்தல் தடுப்பு சிறப்பு டிஜிபி கருண் சின்ஹா, கலால் துறை ஆணையர் கிர்லோஷ் குமார் மற்றும் புதுச்சேரி காவல்துறை ஏடிஜிபி ஆனந்த் மோகன், கலால் துறை ஆணையர் அபிஜித் சிங், துணை ஆணையர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டம் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில கலால் துறை துணை ஆணையர் சுதாகர், ”தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் மதுபான கடத்தலை தடுக்க 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மதுக்கடைக்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். தனி நபருக்கு 9 லிட்டர் பீர், 4.5 லிட்டர் பிராந்தி, 4 லிட்டர் சாராயம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மதுபானம் கடத்துவோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரியிலும் 9, 10, 11 வகுப்புகளுக்கு தேர்வு ரத்தா?

ABOUT THE AUTHOR

...view details