புதுச்சேரி: அருகே லப்போர்த் வீதியை சேர்ந்தவர் ஸ்டாலின் 35. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சின்ன கொசப்பாளையம், ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் மெமூத் அசோசியேட்ஸ் என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வந்துள்ளார்.
புதுவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை ’பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக’ ஆசை வார்த்தைகள் கூறி 20க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் சுமார் ரூ.25 லட்சம் பெற்று கொண்டு அவர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டு தலை மறைவாகி விட்டார்.