தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருவிதாங்கூர் மன்னருக்கு கைது வாரண்ட்! - நீதிமன்றம் எச்சரிக்கை! - எழும்பூர் நீதிமன்றம்

சென்னை: நிலமோசடி வழக்கு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட திருவிதாங்கூர் மன்னர் உட்பட 3 பேர் ஆஜராகவில்லை எனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என சென்னை எழும்பூர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

warrant
warrant

By

Published : Jan 11, 2021, 3:04 PM IST

சென்னை அடையாறு பகுதியில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருந்தன. அதில் 171 சென்ட் நிலத்தை தனியார் நிறுவன அதிபரான சுப்பையா என்பவருக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் விற்றுள்ளனர். இந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் மறு விற்பனை செய்தது 2006 ஆம் ஆண்டு தெரிய வந்தது. இது தொடர்பாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சனை தீராததால், 2013 ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, கெளரி பார்வதி பாய், அஸ்வதி திருநாள் கெளரி லட்சுமி பாய், அஸ்வதி திருநாள் ராமவர்மா, மூலம் திருநாள் ராமவர்மா, அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மா, நிலத்தை வாங்கிய ஏ.சி.ஆர்.ராஜ் கணேசன், பி.ஆர்.ராம்பிரபு ராஜு என 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இதில், ஏழு ஆண்டுகள் கழித்து எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன்படி, இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜ் முன்பு திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அஸ்வதி திருநாள் ராம வர்மா, அவிட்டம் திருநாள் ஆதித்ய வருமா மற்றும் நிலத்தை வாங்கிய ஏ.சி.ஆர்.ராஜ் கணேசன், பி.ஆர்.ராம்பிரபு ராஜ் ஆகியோர் ஆஜராகி பிணை பெற்று, விசாரணைக்கும் ஆஜராயினர்.

திருவிதாங்கூர் மன்னருக்கு கைது வாரண்ட்! - நீதிமன்றம் எச்சரிக்கை!

மீதமுள்ள தற்போதைய மன்னரான மூலம் திருநாள் ராம வர்மா, கெளரி பார்வதி பாய், அஸ்வதி திருநாள் கெளரி லட்சுமி பாய், ஆகியோர் ஆஜராகவில்லை. எனவே இவ்வழக்கை வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி ஒத்திவைப்பதாக தெரிவித்த நீதிபதி, அப்போதும் 3 பேர் ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்தார். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா ஏற்கனவே இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு மாநகரப் பேருந்துகள் இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details