கொல்கத்தா: ஆசிரியர்கள் நியமன ஊழல் தொடர்பான வழக்கில் மேற்குவங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது நெருங்கிய தோழியான பாடகியும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியையும் அமலாக்கத்துறையினர் நேற்று (ஜூலை 23) கைது செய்தனர்.
அர்பிதா முகர்ஜியின் வீட்டிலிருந்து சுமார் 21 லட்சம் ரூபாய் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அர்பிதா முகர்ஜி கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், அர்பிதா முகர்ஜியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க:நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டிலிருந்து ஊழல் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை தகவல்!