நாட்டின் கோவிட்-19 பெருந்தொற்றின் தற்போதைய நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 4 லட்சத்து 55 ஆயிரத்து 555 பேர் பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்ட பாதிப்பில் 70 விழுக்காடு பாதிப்பு எட்டு மாநிலங்களிலிருந்து மட்டுமே உள்ளன.
பெருந்தொற்றின் தற்போதைய பாதிப்பில் 70 விழுக்காடு பாதிப்புகள் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய எட்டு மாநிலங்களிலிருந்து மட்டுமே உள்ளன.
சுமார் 4.55 லட்சம் பாதிப்புகளில் 87 ஆயிரத்து 014 பாதிப்புகள் மகாராஷ்டிரத்தில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 64 ஆயிரத்து 615 பாதிப்புகளும், தலைநகர் டெல்லியில் 38 ஆயிரத்து 734 பாதிப்புகளும் உள்ளன. அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் அதிக உயிரிழப்பு கொண்ட மாநிலமாக டெல்லி உள்ளது.
உயிரிழப்பு விழுக்காடை பொறுத்தவரை டெல்லி பெரும் பாதிப்பைச் சந்தித்துவருகிறது. அங்கு இரவு ஊரடங்கை கொண்டு வரும் முடிவை விரைந்து எடுக்குமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதேவேளை நோய் சிகிச்சையில் கேரளா சிறப்பான முறையில் செயல்பட்டுவருகிறது. அதிகளவிலான குணமடைவோர் பட்டியலில் கேரளா முன்னிலையில் உள்ளது. அதேப்போல் இறப்பு விகிதத்திலும் சிறப்பான புள்ளிவிவரத்தை கேரளா கொண்டுள்ளது.
இதையும் படிங்க:பாஜகவினர் சென்ற வழிகளை மாட்டு சாணத்தால் சுத்தம் செய்த திரிணாமுல் காங்கிரஸ்!