லடாக்:தெற்கு லடாக்கின் நியோமாவில் உள்ள கியாரி என்ற பகுதிக்கு அருகே 10 பேருடன் சென்ற ராணுவ வாகனம் எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இது தொடர்பாக லே (Leh) மூத்த காவல் கண்காணிப்பாளர் பி டி நித்யா கூறுகையில், “லே பகுதியில் இருந்து நியோமாவுக்கு 10 பேரை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் ஒன்று வந்து உள்ளது.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், இன்று (ஆகஸ்ட் 19) மாலை 4.45 மணியளவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், விபத்தில் காயம் அடைந்தவர்களை ராணுவ மருத்துவ மையத்துக்கு அழைத்து வந்தனர். முதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டனர். பின்னர், ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் இக்கட்டான நிலையில் படுகாயங்கள் உடன் சிகிச்சை பெற்று வருகிறார்” என தெரிவித்தார்.