தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிக்கிமில் திடீர் வெள்ளப்பெருக்கு.. 23 ராணுவ வீரர்கள் மாயம்!

Sikkim flood: சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை 23 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Sikkim flood
சிக்கிமில் திடீர் வெள்ளப் பெருக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 10:57 AM IST

Updated : Oct 4, 2023, 1:06 PM IST

சிக்கிமில் திடீர் வெள்ளப்பெருக்கு

அஸ்ஸாம் (தேஜ்பூர்):இந்தியாவில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் சூழ்நிலையில், வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரி அருகே மேகம் வெடித்து, லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியானது ராணுவ வீரர் தங்கியுள்ள முகாம் ஆகும்.

இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறுகையில், "பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல ராணுவ நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிப்பில் ஏற்பட்ட சேதங்களை உறுதிபடுத்தும் முயற்சி நடந்து வருகிறது” என தெரிவித்தார்.

அதாவது மழை காரணமாக சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் திடீரென 15 - 20 அடி வரை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒட்டுமொத்த ராணுவ முகாமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்டம் அருகே உள்ள பார்டாங் பகுதியில் வாகனங்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 23 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளதாகவும், 41 வாகனங்கள் சேற்றில் மூழ்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது காணாமல் போன ராணூவ வீரர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த வெள்ளப்பெருக்கானது இன்று (அக்.4) அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது, “மாங்கன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக இந்த வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. மேலும், அப்பகுதியின் நிலைமை குறித்து சிங்கிடம் பஞ்சாயத்து அலுவலகத்தில், ஒரு கூட்டம் நடத்தி அதில் பங்குதாரர்களை ஒன்றிணைத்து கலந்தாலோசித்து வருகின்றனர்.

மேலும், இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ள ஒற்றுமை முக்கியம். மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குடியிருப்போர் யாரும் ஆற்றங்கரையோரம் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, இந்த வெள்ளத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவி ஆதரவையும், உதவியையும் வழங்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

வெள்ளத்தின் சேதம்:டூங் பாலம் இடிந்து முற்றிலும் சேதமானதால் மாங்கன் மாவட்டம் மற்றும் சுங்தாங் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பிடாங் பாலம் மற்றும் பல குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. தொடர்ந்து, ஆற்றங்கரையோரமாக உள்ள வீடுகள் ஆபத்தில் உள்ளதால், அப்பகுதியில் உள்ளவர்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே இரண்டு ஜிஆர்இஎஃப் (GREF) பணியாளர்கள் உள்பட மூன்று நபர்கள் மாயமாகியுள்ளதாகவும் காங்டாக்கில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளதாக ஜிஆர்இஎஃப் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இணைய சேவை இயங்காததால் ஸ்தம்பித்த சென்னை விமான நிலையம்; 20 விமானங்கள் 2 மணி நேரம் தாமதம்!

Last Updated : Oct 4, 2023, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details