கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தின் அதிநவீன எப்-16 ரக விமானம் இந்தியா எல்லைக்குள் ஊடுருவ முயன்றது. எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ விமானங்களை விரட்டியடித்தனர்.
இந்திய வீரர் அபிநந்தன் மிக்-21 வகை போர் விமானத்தைக் கொண்டு பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்தார். எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பாராசூட் மூலம் அவர் குதித்துத் தப்பினார். பாகிஸ்தான் ராணுவத்தினரால் அபிநந்தன் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சர்வதேச தலையீடு மற்றும் இந்திய தரப்பின் விரிவான அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் அவரை விடுவித்தது. பாகிஸ்தானின் அதிநவீன விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் ஹீரோ ஆனார்.