தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லடாக்கில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடல் 38 ஆண்டுகளுக்கு பின் மீட்பு - லான்ஸ் நாயக் சந்தர் சேகர்

லடாக்கின் சியாச்சினில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடல் 38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Indian Army finds remains of soldier 38 years after he went missing in Siachen
Indian Army finds remains of soldier 38 years after he went missing in Siachen

By

Published : Aug 15, 2022, 6:45 PM IST

Updated : Aug 15, 2022, 6:54 PM IST

லடாக்: இந்திய எல்லையில் அமைந்துள்ள சியாச்சினில் 1984ஆம் ஆண்டு ஆபரேஷன் மேக்தூத் என்னும் ராணுவ நடவடிக்கையில் நமது நாட்டின் ராணுவ குழு ஒன்று ஈடுபட்டது. அந்த குழுவில் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியை லான்ஸ் நாயக் சந்தர் சேகர் என்பவரும் இருந்தார். 18 வீரர்கள் கொண்ட இந்த குழு கியோங்லா பனிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பனிச்சரிவு ஏற்பட்டு 18 பேரும் உயிரிழந்தனர்.

அதில் 14 வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 4 பேருடைய உடல் காணவில்லை. இந்த சம்பவம் நடத்து 38 ஆண்டுகளாகிவிட்டன. இந்த நிலையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி ராணுவ வீரர்கள் சியாச்சினில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்போது பழைய பதுங்கு குழி ஒன்றை கண்டுள்ளனர். இதில் சோதனையிட்ட போது, எலும்புக்கூடுகளுடன் டாக் டேக் ஒன்று கிடந்தது.

இந்த டாக் டேக்கை வைத்து ராணுவ ஆவணங்களை ஆய்வு செய்த போது அந்த எலும்புக்கூடுகள் 38 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த சந்தர் சேகருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து உத்தரகாண்டில் உள்ள அவரது மனைவி தேவிக்கு (65) தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து எலும்புக்கூடுகள் ஹல்த்வானிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு சென்றடைந்த உடன் ராணுவ மரியாதையுடன் சந்தருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க:தேசிய கொடியேற்றத்தின் போது பிரிந்த ​​முன்னாள் ராணுவ வீரர் உயிர்

Last Updated : Aug 15, 2022, 6:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details