ஜம்மு காஷ்மீர்:இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கென்ட் (Kent)என்ற நாய் இன்று (செப் 12) வீர மரணம் அடைந்து உள்ளது. லேபரடார் வகையைச் சேர்ந்த இந்த ராணுவ வீரருக்கு 6 வயது ஆகிறது. யூனிட் 21 (Unit 21 Army dog team) ராணுவ குழுவைச் சேர்ந்த கென்ட், பயங்கரவாதிகளைத் தேடச் செல்லும்போது வீர மரணத்தை தழுவி உள்ளது.
இது தொடர்பாக ஜம்முவின் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தேடுதல் வேட்டையின்போது, ராணுவ வீரர்களை வழிநடத்திச் சென்ற 21வது ராணுவ நாய் குழுவைச் சேர்ந்த 6 வயதுமிக்க பெண் லேபரடார் வகையைச் சேர்ந்த கென்ட் என்ற நாய் வீர மரணம் அடைந்தது. தப்பி ஓடிய பயங்கரவாதிகளின் பாதையில் கென்ட், தனது வீரர்களின் வரிசையை வழிநடத்தியது. இது கடுமையான விரோதப் போக்கின் கீழ் வந்தது” என தெரிவித்து உள்ளார்.