தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்!

11 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்திய ராணுவ வீரர்க்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது ஆக்ரா உயர் நீதிமன்றம்.

11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்
11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

By

Published : Aug 11, 2023, 11:08 PM IST

டெல்லி:11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ராணுவ வீரருக்கு, போதிய சாட்சியங்களின் அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். மேலும் மாணவிகள் இது போன்ற துயரச் சம்பவங்களை அவசியம் தம் பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் வெளிப்படுத்த அச்சப்படக் கூடாது என்றும் அறிவுறித்தியுள்ளது.

சேனாநாயக் என் கன்ஷ்யாம் ஆக்ராவில் ராணுவ தளபதியாக பணியாற்றி வருகிறார். இவர் தன் மூத்த அதிகாரியின் 11 வயது மகளுக்கு தொடர்ந்து 8 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இது மட்டுமின்றி கன்ஷ்யாம் அதனை காட்சியகப்படுத்தி சிறுமியை மிரட்டியும் வந்துள்ளார். இதனால் அச்சம் கொண்ட அந்த சிறுமி பெற்றோரிடம் கூட சொல்ல தயங்கியுள்ளார்.

மனிப்பூர் தௌபால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேனாநாயக் என் கன்ஷ்யாம். ராணுவ தளபதியான இவர் ஆக்ராவிலுள்ள மூத்த அதிகாரியின் வீட்டிற்கு நட்பு ரீதியாக செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இராணுவ மூத்த அதிகாரி தன் குடும்பத்துடன் ஆக்ராவில் வசத்தி வந்தார். இந்நிலையில், மூத்த அதிகாரி மற்றும் அவரது மனைவி வெளியே சென்றதை தெரிந்து இராணுவ மூத்த அதிகாரியின் 11 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இது மட்டுமின்றி இதனை யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும் மீறினால் காட்சியை வெளிப்படுத்திவிடுவேன் என அந்த சிறுமியை மிரட்டியுள்ளது விசாரணையில் வெளி வந்தது. பின்னர் மூத்த அதிகாரியின் பணிமாற்றம் காரணமாக போபால் மாறிய நிலையில், மீண்டும் கன்ஷ்யாம் சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை தொடர்ந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி தன் பள்ளியில் நடைபெற்ற போக்ஸோ சட்டம் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பள்ளியில் ஆசிரியர்களின் உரையை கேட்ட மாணவி துணிந்து தனக்கு நிகழ்ந்த துன்புறுத்தல் குறித்து அவரது பெற்றோரிடம் வாய் திறந்துள்ளார். இதனைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கன்ஷ்யாம் மீது புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கன்ஷ்யாமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக 2019 ஆம் ஆண்டு கன்ஷ்யாம் மீது பாலியல் ரீதியான புகார் ஒன்று அளிக்கப்பட்டதையும் அதனை மஹாராஸ்ட்ரா காவல் துறையினர் விசாரித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு ஆக்ரா உயர் நீதிமன்றம் போக்ஸோ சிறப்பு நீதிபதி பிரேம்ந்திர குமார் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பாலியல் ரீதியாக சிறுமியை துன்புறுத்திய கன்ஷ்யாமிற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும் அவர், "அதிகாரத்தில் இருப்பவரே இப்படி நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது என்றும், 11 வயது சிறுமியை 32 வயது கன்ஷ்யாம் துன்புறுத்தியது மனிதாபிமானமற்றது.

தொடர்ந்து, இந்த சம்பம் அரங்கேறி சுமார் 8 வருடங்களுக்கு பின்னர் மாணவி வாய் திறந்துள்ளது அவர் பயத்தையும் மனநிலையையும் தெளிவு படுத்துகிறது. குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும், அச்சத்தை தகர்த்தி பெண் குழந்தைகள் முன் வர வேண்டும்" என அறிவுறுத்தி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கொலை செய்யும் அளவுக்கு மாணவர்கள் குற்றவாளிகளாக மாறுவது ஏன்? - மனநல மருத்துவர் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details