ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டம், பிலோதி என்ற கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர், கண்ணையா(22). கடந்த ஏழு ஆண்டுகளாக ராணுவத்தில் சேர்வதற்காக தீவிரமாக முயற்சித்து வந்தார்.
அதற்காக நாள்தோறும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வந்தார். இதனிடையே மத்திய அரசின் அக்னிபத் திட்டம் குறித்த அறிவிப்பு கண்ணையாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் வீரர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே ராணுவத்தில் நிரந்தரப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
75 விழுக்காடு வீரர்கள் ஓய்வூதியம் உள்ளிட்டப் பலன்கள் ஏதுமின்றி அனுப்பப்படுவார்கள் என்ற செய்தி அறிந்து கண்ணையா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், கண்ணையா இன்று(ஜூன் 20) காலை தனது கிராமத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.