தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: மார்ச் முதல் வாரத்திற்கான ராசிபலன் - மார்ச் மாத ராசிபலன்

WEEKLY HOROSCOPE: மேஷம் முதல் மினம் வரை 12 ராசிகளின் மார்ச் மாதத்தின் முதல் வாரத்திற்கான ராசிப்பலன்களை காண்போம். இது மார்ச் 5 முதல் 12 வரையிலான வார ராசிபலன்களை உள்ளடக்கியதாகும்.

மார்ச் முதல் வாரத்திற்கான ராசிபலன்
மார்ச் முதல் வாரத்திற்கான ராசிபலன்

By

Published : Mar 5, 2023, 7:10 AM IST

மேஷம்: இந்த வாரம் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அன்பையும் பாசத்தையும் பொழிவார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் பிஸியான வாழ்க்கையில் இருந்து விலகி உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கெனவும், அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும் நேரம் ஒதுக்குவீர்கள். உங்கள் தாயாரிடமிருந்து ஒரு அற்புதமான பரிசையும் பெறுவீர்கள். திருமணமானவர்கள் இல்லற வாழ்வில் மகிழ்ச்சி அடைவார்கள். உங்கள் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். ஆனால், காதல் உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

ஒற்றுமையின்மையால் சண்டை சச்சரவு ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். நீங்கள் தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும், இதன் காரணமாக நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எதிரிகளும் செய்வதறியாது அமைதியாக இருப்பார்கள். மறுபுறம், ஷாப்பிங் செய்யவும் வீட்டுத் தேவைகளுக்கும் நிறைய செலவு செய்வீர்கள். அதை நீங்களே உணர்வீர்கள். நல்ல வருமானம் கிடைப்பதால் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.

குழு உறுப்பினர்களுடனான உங்கள் உறவுகளும் மேம்படும், இது உங்களுக்கு பயனளிக்கும். அவர்கள் உங்களை ஆதரிப்பார்கள், இந்த காலகட்டத்தில் வேலையில் பலவீனமாக இருப்பதால் அதை உங்கள் சீனியரிடம் தெரியப்படுத்துங்கள். மாணவர்களுக்கு படிப்பில் வழிகாட்டுதல் தேவைப்படும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு அறிவார்ந்த நபரின் உதவியை நாடுவது அவசியம். இல்லையெனில், கவனச்சிதறல் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பெரிய அளவிலான உடல் பிரச்னை எதுவும் ஏற்படாது. ஆனால் உங்கள் அன்றாட வழக்கத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உணவிலும் சீரான தன்மையை கடைபிடிக்க வேண்டும். இந்த வாரத் தொடக்கம் பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

ரிஷபம்: இந்த வாரம் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தத்தை அகற்ற தங்களால் முடிந்தவரை முயற்சி செய்வார்கள். அதற்கான நேரமும் அவர்களுக்கு கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். ஆனால் உங்கள் காதலி உங்களிடம் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கலாம். அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாவிட்டால், உங்கள் மீது கோபப்படலாம். அதனால் அவர்களை சமாதானப்படுத்துவது பெரிய செயலாக இருக்கும்.

உங்கள் பணியிலும் வெற்றி அடைவீர்கள். வியாபாரிகள் வியாபாரம் சம்பந்தமாக நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி தொழிலை வளர்ப்பீர்கள். அதன் மூலம் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு சக வேலையாட்களிடமிருந்து முழு ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். இதன் காரணமாக, நீங்கள் உங்கள் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால், நீங்கள் மிகவும் கவனமாக வேலை செய்ய வேண்டும்.

இந்த காலகட்டத்தில் நீங்கள் கொஞ்சம் பலவீனமாக இருக்கலாம். இதன் காரணமாக, நீங்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கலாம். வேலையை மாற்றும் எண்ணமும் மனதில் வரலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த வாரம் நன்மை பயக்கும். ஏதாவதொரு விஷயத்தை நினைத்து மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தியானம் செய்வதால் மன அழுத்தத்தை சரிசெய்யலாம். இந்த வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

மிதுனம்: இந்த வாரம் உங்களுக்கு சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவி குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். வாழ்க்கைத் துணையுடனான அன்யோன்யம், ஒற்றுமை மேம்படும். காதல் வாழ்க்கைக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் இருவருக்கும் இடையே தவறான புரிதலை உண்டாக்கும் எந்தவொரு செயலையும் செய்யாதீர்கள். நீங்கள் காதலிப்பவரை எங்காவது பயணத்திற்கு அழைத்துச் செல்லலாம்.

உங்களுக்கு இப்போது நிச்சயமாக சில செலவுகள் இருக்கும். பணியிடத்திலும், உடன் வேலை செய்பவர்களுக்கு விருந்து கொடுக்க நினைப்பீர்கள். உத்தியோகத்தில் சிறப்பாக செயல்பட்டு கடினமாக உழைப்பீர்கள். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பார்கள். இதன் காரணமாக உங்கள் பதவி வலுப்பெறும்.

மாணவர்கள் தற்போது தங்கள் படிப்புக்காக கடினமாக உழைப்பார்கள். அதன் பலனையும் அடைவார்கள். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு தொழில் போட்டியில் வெற்றியும் கிடைக்கும். இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருப்பீர்கள். இருந்தாலும், உடல்நிலையில் சிறிய பிரச்னை ஏற்பட்டாலும் மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த வாரத் தொடக்கமும் நடுப்பகுதியும் பயணம் செல்வதற்கு ஏற்ற நேரமாக இருக்கும்.

கடகம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலன் தரும் வாராமாக இருக்கும். திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் சற்று சங்கடமாகவே காணப்படுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உங்கள் பிணைப்பு பலவீனமடையலாம். மேலும் அவர்கள் சற்று வருத்தத்துடன் காணப்படுவார்கள். எனவே அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது நல்லது. காதலிப்பவர்கள் எதிலும் அவசரப்படாமலிருப்பது நல்லது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒருவரின் மனதை இன்னொருவர் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வேலையில் உங்கள் படிப்பு மற்றும் கடின உழைப்பை பயன்படுத்தி நல்ல நிலையை அடைவீர்கள். சீனியர்களுடன் நன்றாக பழகுவீர்கள். இந்த வாரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்று இறைவனை தரிசிக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். பெரிய இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நிதி ரீதியாக எச்சரிக்கையாக இருங்கள். இந்த நேரம் முதலீட்டுக்கு உகந்தது அல்ல.

மாணவர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக இருக்கும். உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ஏனெனில் இந்த காலகட்டம் உங்களைப் பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது. உங்களுக்கு அறுவைச் சிகிச்சைகள் கூட செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடல் அசௌகரியம் காரணமாக நீங்கள் சிரமப்படுவீர்கள். எனவே உங்கள் உடல் நலத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். தேவைப்பட்டால் உடனடியாக ஒரு மருத்துவரை சந்தியுங்கள். நீங்கள் நீண்ட நாட்களாக ஏதாவது பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் பயணங்களுக்கு சாதகமானது.

சிம்மம்: இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதனால் உங்கள் இருவருக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். ஒருவருக்கொருவர் தங்கள் அன்பைப் பகிர்ந்துகொள்ள தனிப்பட்ட தருணங்கள் கிடைக்கும். இது உங்கள் உறவை வலுப்படுத்தும்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்களின் கடின உழைப்பால் நல்ல பதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் சவால்களை சந்திக்க நேரிடும். அரசாங்க திட்டங்கள் உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கலாம். மாணவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். உங்கள் ஆரோக்கியம் இப்போது நன்றாக இருக்கும். இருப்பினும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வார நடுப்பகுதி முதல் வாரக்கடைசி வரை பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

கன்னி: இந்த வாரம் சுமாரான பலன் தரும் வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வார்கள். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். இருப்பினும், காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் பலவீனமானதாகவே இருக்கிறது. பரஸ்பர புரிதல் இல்லாததால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் படியான சூழ்நிலைகள் உருவாகலாம். எனவே, கவனமாக இருங்கள்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப நல்ல பலன் கிடைக்கும். உங்கள் மேலதிகாரி உங்களுக்கு ஒரு புதிய வேலையை சவாலாக கொடுப்பார். அதை முடித்துக் காட்டுவதன் மூலம் நீங்கள் அவருக்கு மதிப்புடையவராக தெரிவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் அனுகூலமான வாரமாக இருக்கும். உங்கள் முயற்சியால் வியாபாரம் வேகமாக வளர்ந்து நல்ல லாபம் கிடைக்கும். இந்தவாரம் நீங்கள் நிறைய முதலீடு செய்ய வேண்டியிருக்கும். செலவுகளும் அதிகரிக்கும். இந்த வாரம் நிறைய பயணங்களும் இருக்கும்.

மாணவர்கள் தற்போது படிப்பில் சில சிக்கல்களையும் தடைகளையும் சந்திக்க நேரிடும். எனவே, இதைத் தவிர்க்க நீங்கள் அட்டவணை போட்டு அதற்கேற்ப படிப்பைத் தொடர வேண்டும். இப்போது உங்கள் உடல்நலம் குன்றலாம். ஒவ்வாமை அல்லது வயிறு தொடர்பான நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். உங்களுக்கு மனரீதியான பிரச்னைகளும் ஏற்படலாம். ஆனால் நீங்கள் நம்பிக்கையுடன் இந்த சூழ்நிலைகளிலிருந்து படிப்படியாக வெளியே வருவீர்கள். இந்த வார முற்பகுதியில் பயணங்கள் செய்ய அனுகூலமாக இருக்கும்.

துலாம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். திருமணமானவர்கள் இல்லறவாழ்க்கையில் சற்று கவலையுடன் காணப்படுவார்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை மோசமடைவதால் உங்களுக்கும் பிரச்னைகள் ஏற்படும். தந்தையின் உடல் நிலையும் மோசமடையக்கூடும். இதனால் குடும்பத்தில் சாதகமற்ற சூழ்நிலை நிலவும். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும், இதன்காரணமாக நீங்கள் கொஞ்சம் மகிழ்ச்சியடைவீர்கள். காதலிப்பவர்களின் வாழ்க்கையிலும் சிலகுறைபாடுகள் இருந்திருக்கும், இப்போது அது படிப்படியாகக் குறைந்து, நிலைமை கட்டுக்குள்வரும். உங்கள் உண்மையான நிலைமையை உங்கள் காதலிக்கு தெரியப்படுத்துவீர்கள். இது தவறான புரிதல்களை அகற்றும்.

வேலை செய்பவர்கள் இப்போது வேலைமாற தயாராக இருப்பார்கள். ஆனால், நீங்கள் உங்கள் வேலையைச் சிறப்பாக செய்வீர்கள். இது பிரச்னைகளை ஏற்படுத்தாது. வியாபாரம் நன்றாக இருக்கும், முதலீடும் அதிகரிக்கும். மாணவர்கள் இன்னும் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும். படிப்பில் அலட்சியம் காட்ட வேண்டாம். உடல்நிலையில் இப்போது எந்த பெரிய பிரச்னையும் இல்லை. ஆனால், வழக்கத்திற்கு மாறாக செயல்படக் கூடாது. வாரத் தொடக்கமும் கடைசி 2 நாட்களும் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

விருச்சிகம்: இந்த வாரம் அனுகூலமான வாரமாகும். திருமணமானவர்களுக்கு இல்லற வாழ்வில் மகிழ்ச்சி காணப்பட்டாலும் குடும்பப் பிரச்னைகள் குறித்த கவலைகளும் இருக்கும். குடும்பத்தில் உள்ள முதியவர்களின் உடல்நிலை மோசமடையக் கூடும். உங்களைச் சுற்றி அமைதியான சூழல் நிலவும். பழைய விஷயங்கள் குறித்து வாக்குவாதமும் ஏற்படலாம். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறந்ததாக இருக்கும். உங்கள் உறவை எல்லாவகையிலும் சிறப்பாகவும் அழகாகவும் மாற்ற முயற்சிப்பீர்கள். நீங்கள் காதலிப்பவர் அதை மிகவும் விரும்புவார்.

அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும், இதன்காரணமாக நீங்கள் உங்கள் வேலையில் வெற்றியைப் பெறுவீர்கள். வெற்றி உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்னைகளும் ஓரளவிற்கு குறையும். இந்த நேரத்தில் கவனமாக இருப்பது நல்லது, யாரிடமும் கசப்பான வார்த்தைகளைப் பேச வேண்டாம். வியாபாரத்திற்கு சரியான நேரமிது. உங்கள் திட்டங்கள் நிறைவேறும், அவற்றால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் சில புதிய நபர்களைச் சந்திக்கும் வாய்ப்புகளும் உண்டாகும்.

மாணவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். விடாமுயற்சியுடன் படிப்பீர்கள், படித்து சிறந்த முடிவுகளையும் பெறுவீர்கள். இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. உடல்நிலையில் பெரிய பிரச்னை எதுவும் இருக்காது. இந்த வாரத்தின் தொடக்கம் பயணங்களுக்கு ஏற்றது.

தனுசு: இந்த வாரம் உங்களுக்கு கலகலப்பான வாரமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆசீர்வாதத்தால் உங்கள் வேலை வெற்றியடையும். உங்களுக்கு இப்போது சில மனக்கவலைகள் இருக்கலாம். அதிலிருந்து வெளியே வர முயற்சிப்பீர்கள். பொருளாதார இழப்பும் ஏற்படலாம். ஆனால், தடைபட்டிருந்த சில வேலைகள் இறைவனின் அருளால் நிறைவேறும், இதனால் பொருளாதார ரீதியாக உங்கள் நிலை வலுப்பெறும்.

வியாபாரிகளுக்கு இந்த வாரம் சாதாரணமாகவே இருக்கும். ஆனால், வேலை செய்பவர்கள் தங்கள் வேலையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டால், எல்லாம் சரியாக இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெற, அவர்களை நன்றாக நடத்த வேண்டியது அவசியம். மாணவர்கள் மிகவும் தீவிரமாக படிப்பார்கள். இது அவர்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்கள் ஆரோக்கியம் இப்போது மேம்படும். வாரத் தொடக்கத்தைத் தவிர, மற்ற நாட்கள் பயணத்திற்கு சாதகமாக இருக்கும்.

மகரம்: இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாரமாக இருக்கும். ஆனால் குடும்ப சண்டைகள் மற்றும் மனஉளைச்சல் காரணமாக, நீங்கள் மீண்டும் மீண்டும் சிக்கலில் சிக்குவீர்கள். திருமணமானவர்கள் இல்லற வாழ்க்கையை அனுபவிப்பார்கள். வாழ்க்கைத் துணையை மதித்து செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களை நன்கு கவனித்துக் கொள்வீர்கள். காதலிப்பவர்களுக்கு சாதாரணமான வாரமிது. நீங்கள் காதலிப்பவரின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இப்போது நீங்கள் திடீரென்று பயணம் மேற்கொள்ளலாம்.

பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வங்கியில் இருப்புத் தொகையை அதிகரிக்க வாய்ப்புண்டு. வேலை செய்பவர்களுக்கு சகஜமான வாரமிது. சற்று கடினமாக உழைத்தால் நல்லபலன் கிடைக்கும். வியாபாரிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களின் சில திட்டங்கள் இடையிலேயே பயனின்றி போகலாம். இதன் காரணமாக உங்கள் வேலையில் இடைவெளி ஏற்படலாம். அதை முன்னெடுத்துச் செல்ல ஒரு அனுபவமிக்க நபரின் உதவியை நாடுவீர்கள். மாணவர்களுக்கு சாதாரணமான வாரமிது. விடாமுயற்சியுடன் படிப்பார்கள். இப்போது உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது அவசியம். இந்த வாரத் தொடக்கமும் கடைசி இரண்டு நாட்களும் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

கும்பம்: இந்த வாரம் சுமாரான பலன் தரும் வாரமாக இருக்கும். வார முற்பகுதியில் இருந்தே மனக்கவலைகளும், சில செலவுகளும் உங்களை அலைக்கழிக்கலாம். நீங்கள் எதைப் பற்றியாவது தீவிரமாக சிந்திப்பீர்கள், சிந்தித்து அதற்கான நல்ல முடிவுகளைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும், நீங்கள் காதலிப்பவர் அர்ப்பணிப்புடன் இருப்பார். திருமணமானவர்கள் இல்லறவாழ்வில் ஏற்ற இறக்கங்களை உணர்வார்கள். இதனால், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் பெருமளவு அதிகரிக்கும். இது உங்கள் பிரச்னைகளைக் குறைக்கும்.

வேலைசெய்பவர்கள் இந்தவாரம் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. உங்கள் வேலை உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. வேலையில் கவனம் தவறினால் யாராவது ஏதாவது சொல்ல வாய்ப்பு கொடுத்தது போல் ஆகிவிடும். அத்தகைய வாய்ப்பை வழங்க வேண்டாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்லபலன் கிடைக்கும். சில புதிய தொழில் திறன்களைப் பெறலாம். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பார்கள். படிப்பில் கடின உழைப்பின் பலனை அடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பிரச்னை எதுவும் ஏற்படாது. ஆனால், மன உளைச்சலை உங்களிடமிருந்து விலக்கிவைக்க வேண்டும். இந்த வாரக்கடைசி இரண்டு நாட்கள் பயணத்திற்கு சாதகமாக இருக்கும்.

மீனம்: இந்த வாரம் சுமாரான பலன் தரும் வாரமாக இருக்கும். வார முற்பகுதியில் குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் வந்துசேரும். தாம்பத்திய வாழ்க்கையிலும் காதல் துளிர்த்தெழும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும், இதன் காரணமாக உங்கள் உறவு இன்னும் அழகாக மாறும். அவர்களுடன் எங்காவது வெளியே செல்வீர்கள். கோவிலுக்கும் செல்வீர்கள். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும். உங்கள் கலை வெளிப்பாட்டின் மூலம் நீங்கள் காதலிப்பவரின் இதயத்தை வெல்வீர்கள்.

வேலை செய்பவர்களுக்கு வேலையில் கூடுதல் கவனம் தேவை, இல்லையெனில் இடையூறுகள் ஏற்படலாம். தற்போது காலம் உங்களுக்கு சாதகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கும் நேரம் நன்றாக இருக்கிறது. படிப்பில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும், உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரத்தொடக்க நாட்கள் பயணத்திற்கு சாதகமாக இருக்கும்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: மார்ச் 4ஆம் தேதிக்கான ராசிபலன்!

ABOUT THE AUTHOR

...view details