அமராவதி:மார்கதர்சி சிட்பண்ட் வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இடைக்கால உத்தரவுகள் மீதான முடிவை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 30ஆம் தேதி சிட் பதிவாளர் வெளியிட்ட பொது அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. குண்டூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனம் தாக்கல் செய்த இரண்டு துணை மனுக்கள் மீதான விசாரணை நிறைவு பெற்றது.
அதேபோல் பிரகாசம் மாவட்டத்தில் சிட் குழுமம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவின் மீதான விசாரணை நிறைவு பெற்றதும், உச்ச நீதிமன்றத்தில் சிட்பண்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்பண்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசூர்யா தீர்ப்பு வழங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதன்கிழமை நடந்த விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஸ்ரீராம், அரசு சார்பில் அறிக்கைகளை தாக்கல் செய்தார். தொடர்ந்து வாதிட்ட அவர், சிட் குழுமத்தை முடக்கும் ஒரு தலைபட்சமான முடிவுகள் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை என்றும், முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து சிட் குழுவை தக்கவைப்பதற்கு ஆட்சேபனைகளை பெற பொது அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் கூறினார்.
தாமாக முன்வந்து பொது அறிவிப்பு விடும் அதிகாரம் சிட் பதிவாளர்களுக்கு உள்ளது என்றும் அதற்கு எந்த தரப்பினரிடம் இருந்தும் புகார் மனுக்கள் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, உதவி மற்றும் துணைப் பதிவாளர்களுக்கு அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிட்பண்ட் சட்டத்தின் பிரிவு 48(H) கீழ், குழுக்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க துணைப் பதிவாளருக்கு சுய அதிகாரம் வழங்கப்பட்டு உளளதாக தெரிவித்தார்.