தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் ஊரடங்கு கிடையாது - முதலமைச்சர் அறிவிப்பு! - Delhi cm annoncement

மக்கள் அனைவரும் கரோனா விதிகளைப் பின்பற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

aravind-kejiriwal-about-delhi-lockdown
aravind-kejiriwal-about-delhi-lockdown

By

Published : Jan 9, 2022, 5:37 PM IST

டெல்லி : கடந்த சில நாள்களாக, கரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. ஒரே நாளில் மட்டும் 4 ஆயிரத்து 99 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அந்த வகையில் மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் 6.46 விழுக்காடு அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒமைக்ரான் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 'மக்கள் யாரும் பதற்றப்படத் தேவையில்லை. பொறுப்புடன் இருங்கள்.

மக்கள் அனைவரும் கரோனா விதிகளைப்பின்பற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்படாது. சாமானியர்கள் பாதிக்கப்படாதவண்ணம் தடைகளை முடிந்தவரை மட்டுப்படுத்தவே விரும்புகிறோம்.

நாளை டெல்லி பேரிடர் மேலாண்மை முகமை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், நிலைமையை மீண்டும் மதிப்பாய்வு செய்வோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்குக் கரோனா பூஸ்டர் டோஸ் - நாளை முதல் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details