தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏப்ரல் 2வது வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள்! - மேஷம்

மேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகளுக்கான ஏப்ரல் 2ஆம் வாரத்திற்கான ராசி பலன்களை காண்போம். இது ஏப்ரல் 9-ல் தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான வார ராசி பலன்களை உள்ளடக்கியதாகும்.

Weekly Horoscope
Weekly Horoscope

By

Published : Apr 9, 2023, 7:46 AM IST

மேஷம்:இந்த வாரம் உங்களுக்கு கலகலப்பாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக உள்ளது. உங்கள் துணை வேலைக்காக வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். இதனால் ஒருவரையொருவர் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் சற்று மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.

இந்த வாரம் நீங்கள் வியாபாரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில புதிய நபர்களை சந்திப்பீர்கள், அவர்கள் உங்கள் வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்ல உங்களுக்கு உதவுவார்கள். இப்போது உங்கள் நிலை மேம்படத் தொடங்கும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள், இது பணியிடத்தில் உங்களின் நிலையை வலுப்படுத்தும். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளை வாழ்க்கைத் துணையுடன் கலந்தாலோசிக்க வேண்டும். வியாபாரத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டால் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். சில புதிய நபர்களிடமிருந்து பெறும் தகவல்களைப் பெறுவதன் மூலம் உங்கள் வியாபாரத்தை வளர்க்க முடியும்.

இந்த வாரம் உங்களுக்கு மன அழுத்தம் குறைந்து மனதில் நிம்மதி அதிகரிக்கும். காதலிப்பவர்கள் தங்கள் வேலையின் காரணத்தால் துணையை பிரிந்து தனிமையை உணர்வீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வேலை சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக இருக்கும், உங்கள் கவனத்தை சிதற விடாதீர்கள்.

மிதுனம்: இந்த வாரம் உங்கள் திருமண வாழ்க்கையில் டென்ஷன் குறையும். உங்கள் உறவில் அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையும் உங்களுக்கு ஆதரவு அளிப்பார். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சில பெரிய செலவுகளுடன் தொடங்கலாம். உங்கள் துணைக்கு அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி பரிசளிப்பீர்கள்.

பணம் செலவழிப்பதன் மூலம் அந்த பொருள் கிடைத்தாலும், அதிகம் செலவானது குறித்து யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன் கிடைக்கும். வேலை சம்பந்தமாக சற்று அலைச்சல் இருக்கலாம். மாணவர்கள் இப்போது அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். படிப்புக்காக கடுமையாக உழைப்பீர்கள். தனியாக படிக்க சிறிது நேரம் செலவிடுங்கள். உடல் ஆரோக்கியம் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக உள்ளது.

கடகம்: இந்த வாரம் உங்களுக்கு நன்றாக உள்ளது. காதலிப்பவர்கள் இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் துணையை உங்களுடன் அழைத்துச் சென்று தொலைதூரத்தில் எங்காவது நடைபயிற்சி செல்லலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் குறைந்து ஒருவருக்கொருவர் புரிதல் சிறப்பாக இருக்கும்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் திறமையால் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக உள்ளது. மாணவர்கள் இப்போது அவர்கள் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும், இதனால் அவர்களது செயல்திறனும் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.

சிம்மம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் குறையும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வீட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மன அழுத்தம் தரும், சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக இருக்கும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் மூலம் நல்ல பதவியைப் பெற முடியும். இந்த வாரம் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றதாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு நன்றாக உள்ளது. உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதோடு, கொஞ்சம் புரிதலைக் காட்டவும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் அன்பும் பாசமும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. உங்கள் துணையை புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

இப்போது நீங்கள் உங்கள் நிதி நிலைமையில் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டும். யோசிக்காமல் உங்கள் பணத்தை யாரிடமும் கொடுக்க வேண்டாம். இதனால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம். எந்தவொரு ஆவணத்திலும் கையொப்பமிடுவதற்கு முன்பு முழுமையாக சரிபார்க்கவும். இல்லையெனில் சிக்கல் ஏற்படலாம். வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். உங்களின் கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும்.

துலாம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க சாதகமானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், உங்கள் இனிமையான வார்த்தைகளால் உங்கள் வாழ்க்கைத் துணையின் மனதை வெல்வீர்கள். குடும்ப விழாவில் கலந்துகொள்வீர்கள். உங்கள் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.

வேலை செய்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசுத் துறையினரால் நல்ல பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் இப்போது அவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். அவர்களின் நேர்மறையான முடிவுகளைக் காண்பார்கள், உங்கள் உடல் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

விருச்சிகம்: இந்த வாரம் அனுகூலமான வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் அன்பை அதிகமாக செலுத்துவீர்கள் மற்றும் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் நிறைய நேரம் செலவிடுவீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்கள் வேலையில் சற்று விழிப்புடன் இருப்பது அவசியம். வியாபாரிகளுக்கு இந்த வாரம் வெற்றி கிடைக்கும் வாரமாக இருக்கும்.

வேலை செய்பவர்கள் வேலை செய்யுமிடத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். உங்கள் தொழிலும் வேகமெடுக்கும். ரகசியமாக பணம் வாங்கும் நிலை ஏற்படலாம். பொருளாதார ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும், செலவுகளும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. ஆனால் நீங்கள் மன அழுத்தத்தை குறைக்க குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள்.

தனுசு:இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். இன்னும் டென்ஷன் இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் அன்பும் இருக்கும், இதனால் உங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கைக்கு நேரம் சாதாரணமாக இருக்கும்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சில நன்மைகள் கிடைக்கும். நீங்கள் வேறு வேலைக்கு கூட விண்ணப்பிக்கலாம். வியாபாரத்திற்கு இந்த நாள் சாதாரணமானது, ஆனால் நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வார முற்பகுதியில் நிறைய செலவுகள் ஏற்படலாம். ஆனால் செலவுகளால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள், ஏனெனில் அனைத்து செலவுகளும் வசதிகளுக்காக மட்டுமே இருக்கும்.

மகரம்: இந்த வாரம் சுமாரான வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் டென்ஷன் ஏற்பட்டு வாழ்வில் சற்று மந்த நிலை ஏற்படலாம். காதலிப்பவர்களுக்கு நேரம் மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்துவீர்கள். வேலையைப் பற்றி கவலை உங்களுக்கு இருக்கும். உங்கள் வேலையை சிறப்பாக செய்ய முயற்சி செய்யுங்கள், இதனால் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.

தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். இந்த வாரம் நீங்கள் சில புதிய நன்மைகளைப் பெறலாம், ஆனால் இதற்காக நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் இப்போது தங்கள் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை இன்னும் சிறப்பாக மாற்ற முயற்சிப்பார்கள். வீட்டில் கொஞ்சம் சந்தோஷம் வந்து சேரும். வீட்டின் சூழ்நிலையும் சாதகமாக இருக்கும், இதன் காரணமாக அனைவருடனும் உங்கள் உறவு நன்றாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு காலம் சற்று பலவீனமாக இருக்கலாம். தனியே யாரிடமிருந்தும் விலகிச் செல்ல வேண்டாம். உங்களின் கடின உழைப்பு வெற்றியைத் தரும்.

பணிபுரிவோர்களுக்கு நிலைமை படிப்படியாக மேம்படத் தொடங்கும், வேலையில் கடின உழைப்பு மிகவும் முக்கியமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றம் தரும் நேரம் இது. உங்கள் முயற்சிகள் வெற்றி பெற்று நல்ல வளர்ச்சி அடைவீர்கள். இந்த முறை முதலீட்டைப் பொறுத்தவரை சற்று பலவீனமாக உள்ளது. மாணவர்கள் தங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைக் காண்பார்கள். மேனேஜ்மென்ட் படிக்கும் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

மீனம்: இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வாரத் தொடக்கத்திலேயே பயணத்தில் ஈடுபடுவீர்கள். உங்கள் நண்பர்கள் அல்லது நெருங்கியவர்களுடன் இந்த பயணத்தை அனுபவிப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான காலமாக இருக்கும். இடையில், சிலருடன் உங்களுக்கு மோதல் ஏற்படலாம், அதிலிருந்து நீங்கள் விலகி இருப்பது சரியாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை இந்த நேரத்தில் சாதாரணமாக இருக்கும். உங்கள் உறவில் வலிமையை பராமரிக்க முயற்சிக்க வேண்டும்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதுடன், உங்கள் உழைப்பும் பாராட்டப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு தொலைதூரப் பகுதிகள், மாநிலங்களில் இருந்து நன்மைகள் கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும், ஆனால் சிலர் உங்கள் மீது கோபப்படலாம். மாணவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் காட்டினால் அதற்கான நல்ல பலனையும் பெறுவீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details