அமராவதி:கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், பல்வேறு தேர்வுகள் ஆன்லைனிலும் நடத்தப்பட்டுவந்தன. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்த பிறகு தற்போது சில தேர்வுகள் மத்திய, மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்வுகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் ஏபிபிஎஸ்சி (Andhra Pradesh Public Service Commission) தேர்வானது கரோனா அச்சுறுத்தல் காரணமாக முழுவதும் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.
இந்தியாவில் முதல் முறையாக அரசுப் பணிகளுக்கான தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது. இங்கு தேர்வுத் தாள்களுக்கு மாற்றாக டேப்லெட் மூலம் தேர்வுகள் நடைபெற்றன. மேலும், தேர்வுகளுக்கான தேர்வுத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையிலேயே மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.