டெல்லி: ஆப்பிள் நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஆபரேட்டிங் சிஸ்டமான iOS 16- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், புதிய லாக் ஸ்கிரீன்களுடன் புதிய விட்ஜெட்கள், புதிய கீபோர்டு ஹாப்டிக்ஸ், புதிய ஹோம் ஆப் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய iOS 16- ல், ஐபேட் ஓஎஸ் அப்டேட் செய்யப்படவில்லை என்றும், அது iPadOS 16.1 ஆக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
iOS 16 -ல், லாக் ஸ்கிரீன் மேம்படுத்தப்பட்டுள்ளது, அதில் பயனர்கள் நோட்டிஃபிகேஷன்களை வழங்கக்கூடிய விட்ஜெட்களைச் சேர்க்கலாம். iMessage -லும் சில அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒரு மெசேஜை அனுப்பிய பிறகு 15 நிமிடங்கள் வரை அதை எடிட் செய்ய முடியும், இரண்டு நிமிடங்களுக்குள் அதை நீக்க முடியும்.